Connect with us
Cinemapettai

Cinemapettai

அலட்டல் இல்லை! அலம்பல் இல்லை! நாகரீகமான முறையில் அறிவிக்கப்பட்ட ரஜினி பட டைட்டில்!

rajinikanth kaalan

Tamil Cinema News | சினிமா செய்திகள்

அலட்டல் இல்லை! அலம்பல் இல்லை! நாகரீகமான முறையில் அறிவிக்கப்பட்ட ரஜினி பட டைட்டில்!

படம் முடிந்து தியேட்டருக்கு வருகிற நாள் வரைக்கும் அஜீத் 90, விஜய் 95 என்று குறிப்பிட்டே விளம்பரம் கொடுக்கிறார்கள். தலைப்பை சொல்லிவிட்டால் ‘ஹைப்’ போய் விடுமாம். இதெல்லாம் விட தலைப்பையும் நள்ளிரவில்தான் வெளியிடுவார்கள்.

கொட்ட கொட்ட முழித்திருந்து தங்கள் தலைவனின் படத் தலைப்பை கேட்பதற்கு ஆர்முள்ள ரசிகர்கள், அந்த இரவு நேரத்தில் பட்டாசுகளை போட்டு, வயதானவர்களை வானுலகம் அனுப்பி வைப்பதெல்லாம் பயங்கரம். இந்த அலட்டல் அலம்பல் எதுவுமில்லாமல், நாகரீகமான முறையில் ரஜினியின் 164 வது படத் தலைப்பை அறிவித்திருக்கிறார் அப்படத்தின் தயாரிப்பாளர் தனுஷ்.

‘காலா ’ என்று பெயர் வைத்திருக்கிறார்கள் இந்த புதிய படத்திற்கு. சப் டைட்டிலாக கரிகாலன் என்ற வார்த்தையும் சேர்க்கப்பட்டுள்ளது. இதற்கப்புறம் அந்த தலைப்பை வைத்துக் கொண்டு அது என்ன மாதிரியான கதையாக இருக்கும் என்று அலசுவதுதானே மீடியாவின் வேலை?

kaalaபொதுவாகவே கரிகால் சோழன் நீதிக்கும் நேர்மைக்கும் பேர் போனவன் என்கிறது வரலாறு. அவன் பாலகனாக இருந்த நேரத்திலேயே முதியவர் வேடம் போட்டு நீதி சொல்லியதாக ஒரு கதையும் உண்டு.

கொளுத்தி போடுவோம். பத்துனாலும் பத்தும்!

சென்சார் செய்யாத செய்திகள், வீடியோக்கள் பார்க்க சினிமாபேட்டை Youtube-ல் Subscribe பண்ணுங்க.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published.

To Top