சிஏஏ சட்டத்தால் முஸ்லீம்கள் பாதிக்கப்பட்டால்.. ரஜினி என்ன சொல்லவர்றாருன்னு முழுசாக கேளுங்க!

தனது இல்லம் முன்பு ரஜினி நேற்று அளித்த பேட்டியில், சிஏஏ சட்டத்தால் இஸ்லாமிய சமூகத்தினர் யாராவது பாதிக்கப்பட்டால் அவர்களுக்காக குரல் கொடுக்கும் முதல் ஆளாக நாளாக இருப்பேன். டெல்லியில் நடந்த வன்முறைகளுக்கு மத்திய உளவுத்துறையின் தோல்வியே காரணம். இந்த விஷயத்தில் மத்திய அரசை நான் வன்மையாக கண்டிக்கிறேன்.

டிரம்ப் வந்திருக்கும் போது அவர்கள் எவ்வளவு ஜாக்கிரதையாக இருந்திருக்க வேண்டும். உளவுத்துறை அவர்களின் வேலையை சரியாக செய்யவில்லை. அதை வந்து முழுமையாக இரும்பு கரம் கொண்டு அடக்க வேண்டும். இனிமேலாவது அவர்கள் ஜாக்கிரத்தையாக இருப்பார்கள் என நம்புகிறேன். மதத்தை வைத்து அரசியல் செய்கிறார்கள்.

இதை மிகவும் வன்யைமாக கண்டிக்கிறேன். சிலபேர் சில கட்சிகள், சில மதத்தை வைத்து அரசியல் செய்கிறார்கள். இதை மத்திய அரசு இரும்பு கரம் கொண்டு அடக்கவில்லை என்றால் எதிர்காலத்தில் மிகவும் கஷ்டமாகிவிடும்.

என்ஆர்சி குறித்து மத்திய அரசு விளக்கி விட்டது. அதில் குழப்பமே இல்லை. ஆனால் மத்திய அரசு குடியுரிமை திருத்த சடத்தை திரும்ப பெறும் என்ற நம்பிக்கை எனக்கு இல்லை. அதனால் குடியுரிமை திருத்த சட்டத்தை எதிர்த்து போராடுவதால் புரயோஜனப்படாது என்பது என்னுடைய கருத்து.

இதைச் சொல்வதால் உடனே நான் பாஜகவுடை ஊதுகுழல், பாஜகவுடைய ஆள் என்று சொல்லாதீர்கள். என்னை பாஜக ஆள் என்று மூத்த பத்திரிக்கையாளர்கள், மூத்த அரசியல் விமர்சகர்கள் சிலர் கூறுவது வேதனையாக உள்ளது” என்றார்.

Leave a Comment