Connect with us

Cinemapettai

thalaivar

Politics | அரசியல்

பிஜேபியின் பினாமி ரஜினி என்று கூவிய கூட்டம்.. நக்கலுடன் பதிலடி கொடுத்த சூப்பர் ஸ்டார்

சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகியிருக்கும் தர்பார் திரைப்படத்தின் மோஷன் போஸ்டர் நேற்று வெளியாகி பட்டிதொட்டியெங்கும் பட்டையை கிளப்பி வருகிறது. அனிருத் இசையமைத்திருக்கும் இந்தப் படத்தை வருகிற பொங்கலுக்கு லைகா புரோடக்சன்ஸ் வெளியிட இருக்கிறது.

இந்நிலையில் கமல்ஹாசனின் புதிய அலுவலக திறப்பு விழாவிற்கு வந்த தலைவர் ரஜினிகாந்த்திடம் பத்திரிகைக்காரர்கள் சரமாரியாக கேள்விகள் கேட்டனர். அதற்கு எப்பவும் போல் மாஸாக பதில் தெரிவித்துள்ளார்.

திருவள்ளுவர், காவி சிலை விவகாரம் குறித்து கேள்வி எழுப்பிய போது, தலைவர் ரஜினிகாந்த் அவர்கள் பல நாட்களாக பிஜேபிகாரர்கள் எனக்கும் காவி பூச நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். ஆனால் திருவள்ளுவரும் மாட்ட மாட்டார், நானும் மாட்ட மாட்டேன் என நக்கல் கலந்த நையாண்டியுடன் பதிலளித்தார்.

மேலும் உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட விரும்பவில்லை என்பதையும் திட்டவட்டமாக அறிவித்துள்ளார். இதனால் எப்படியாவது பிஜேபி கட்சிக்கு எப்படியாவது ரஜினியை இழுத்து விடலாம் என நம்பிக்கொண்டிருந்தவர்கள் முகத்தில் சாணி அள்ளி பூசிவிட்டார் ரஜினிகாந்த்.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

To Top