ரஜினியிடம் மறைமுகமாக ஆதரவு தேடும் கமலஹாசன்.. உச்சகட்ட பயத்தில் அரசியல் கட்சிகள்

ரஜினி அரசியலுக்கு முழுக்கு போட்ட உடனே பல அரசியல் தலைவர்களும் உங்களுடைய உடல் நலம் தான் முக்கியம் என கூறி மனதிற்குள்ளே சந்தோஷம் அடைந்து வருகின்றனர்.

திரைத்துறையில் நீண்ட வருட நண்பர்களாக இருக்கும் ரஜினியும், கமலும் அவ்வப்போது சந்தித்து பேசுவது வழக்கம். ஆனால் கமல் தேர்தல் பிரச்சாரத்தில் இருப்பதால், ரஜினிகாந்த் அரசியலுக்கு வரவில்லை எனக் கூறிய போதும் அவரை நேரில் சந்திக்காமல் உள்ளார்.

rajinikanth kamal haasan
rajinikanth kamal haasan

ரஜினி அரசியலுக்கு வரவில்லை என கூறியதை பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்கள் என்று கேட்டபோது அதற்கு கமல்ஹாசன் ரஜினி எடுத்த முடிவு சற்று ஏமாற்றமே! இருந்தாலும் அவரது உடல் நலம் தான் முக்கியம் என சூசகமாக கூறினார்.

மேலும் கமல்ஹாசன் ஒரு போன் செய்து என் நண்பரிடம் பேசினால் போதும் எங்களுக்கு இடையே இருக்கும் அரசியல் பிளவு வராது என கூறியது குறிப்பிடத்தக்கது. இதை வைத்து பார்க்கும் பொழுது கமல்ஹாசன் சென்னையில் ரஜினியை சந்தித்து ஆதரவு கேட்பார் என தெரிகிறது.

ரஜினி அரசியலுக்கு வரவில்லை என்பதால் கமலுக்கு ஆதரவு கொடுப்பாரா.? இவர்கள் இருவரும் தமிழ்நாட்டின் முக்கிய மாற்றத்தை கொண்டு வர வேண்டும் என நினைத்ததால் இருவரும் ஒன்று சேர்ந்து செயல்ப்பட்டால் சாத்தியம் என்று இன்னும் ரசிகர்கள் நம்பிக்கை வைத்துள்ளனர்.