செவ்வாய்க்கிழமை, டிசம்பர் 10, 2024

என்ன அடிக்கிற முழு தகுதி உங்களுக்கு தான் இருக்கு.. பிரபல நடிகையிடம் அடம் பிடித்த சூப்பர்ஸ்டார்

Rajinikanth: அடி வாங்குனா உங்க கையால தான் வாங்குவேன்னு பிரபல நடிகை ஒருவருக்கு போன் பண்ணி சூப்பர் ஸ்டார் அடம் பிடித்து இருக்கிறார். திரை பிரபலங்கள் சமீப காலமாக யூடியூப் சேனல்களில் தங்களுடைய ஃப்ளாஷ்பேக் பற்றி ரொம்பவும் சுவாரஸ்யமாக பேசி வருகிறார்கள்.

அப்படி நடிகை ஒருவர் பேசிய விஷயம் தான் தற்போது பெரிய அளவில் வைரலாகி இருக்கிறது. தமிழ் சினிமாவை பொருத்தவரைக்கும் கடந்த சில வருடங்களுக்கு முன்பு வரை ரஜினி படத்தில் யாராவது வில்லனாக நடித்தால் அவர் படம் ரிலீஸ் ஆன பிறகு வெளியில் தலை காட்ட முடியாது.

பிரபல நடிகையிடம் அடம் பிடித்த சூப்பர்ஸ்டார்

அருணாச்சலம் படத்தில் வில்லியாக நடித்துவிட்டு வடிவுக்கரசி பட்ட பாடு எல்லோருக்குமே தெரியும். அது மட்டும் இல்லாமல் ரஜினிக்கு நிகராக வில்லன் கேரக்டர்களை போடுவது என்றால் பெரிய குழப்பமே இயக்குனர்களுக்கு வந்துவிடும். வில்லன்களுக்கே இந்த நிலைமை என்றால் வில்லி கேரக்டர்களை நினைத்துப் பாருங்கள்.

இதுவரை ரஜினியின் படத்தில் நடித்த வில்லிகள் என்றால் அது படையப்பா படத்தில் ரம்யா கிருஷ்ணன், அருணாச்சலம் படத்தில் வடிவுக்கரசி மற்றும் மன்னன் படத்தில் விஜயசாந்தி தான். விஜயசாந்தியை வில்லி என்று சொல்லி விட முடியாது அந்த படத்தில் ரஜினிக்கு ஹீரோயின் அவர்தான்.

பட ஆரம்பத்தில் குஷ்பு உடன் தான் ஜோடி சேர்வது போல் காட்டப்பட்டு சந்தர்ப்ப சூழ்நிலையால் ரஜினி விஜயசாந்தியை திருமணம் செய்வார். விஜயசாந்தி படு பிஸியாக நடித்துக் கொண்டிருந்த காலகட்டம் அது. சாந்தி தேவி கேரக்டரில் விஜயசாந்தி தான் நடிக்க வேண்டும் என ரஜினிரொம்பவே விரும்பி இருக்கிறார்.

அவர் ரொம்ப பிசியாக இருந்தும் ஒரு முறை மட்டும் அதைக் கேட்டுப் பாருங்கள் என ரஜினி சொல்லி இருக்கிறார். முழு கதையையும் கேட்டதும் ரஜினியை அடிப்பது போன்ற கேரக்டரா எனக்கு வேண்டவே வேண்டாம் என்று சொல்லிவிட்டாராம் விஜயசாந்தி.

இது தெரிந்து ரஜினி விஜயசாந்திக்கு போன் பண்ணி அந்த கேரக்டரில் நீங்கள் தான் நடிக்க வேண்டும், என்னை அடிப்பதற்கு முழு தகுதி உங்களுக்கு மட்டும் தான் இருக்கிறது என பேசினாராம். அதன் பிறகு தான் விஜயசாந்தி நடிக்க ஒப்புக்கொண்டு இருக்கிறார். இந்த தகவலை அவரே சமீபத்திய பேட்டி ஒன்றில் பகிர்ந்து இருக்கிறார்.

- Advertisement -

Trending News