ரஜினி முடிவால் பட்டாசு வெடித்துக் கொண்டாடும் தொண்டர்கள்.. சீமான் அளித்த பரபரப்பான பேட்டி!

ரஜினிகாந்த் நேற்று இனி கட்சியை ஆரம்பிக்க வில்லை என்றும் சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட போவது இல்லை என்றும் அதிகாரப்பூர்வமாக அறிவித்ததையடுத்து அவரது ரசிகர்கள் சற்று மன உளைச்சலில் உள்ளனர்.

ஆனால் இந்த அறிவிப்பைக் கேட்ட பல அரசியல்வாதிகள் மற்றும் அரசியல் தொண்டர்கள் பலரும் உச்சகட்ட சந்தோஷத்தில் உள்ளனர் என்றே கூறலாம். ஏனென்றால் அவர்கள் ரஜினி அரசியலுக்கு வந்தால் நமது அரசியல் வாழ்க்கை சரிந்துவிடும் என்று பயந்தன. தற்போது அதற்கு முற்றுப்புள்ளி கிடைத்துள்ளதால் இந்த செய்தியை கொண்டாடி வருகின்றனர்.

அண்ணாத்த படத்தில் கலந்துகொண்டபோது ரஜினிகாந்துக்கு ரத்த அழுத்தம் ஏற்பட்ட காரணத்தாலும் மேலும் என்னுடன் இருப்பவர்கள் பலிகடா ஆக்க விரும்பவில்லை என தெரிவித்ததால் மற்ற அரசியல் தொண்டர்கள் தற்போது சந்தோஷத்தில் உள்ளனர்.

இந்த அறிவிப்பைக் கேட்ட திமுக தொண்டர்கள் உட்பட மற்ற அரசியல் தொண்டர்களும் பட்டாசு வெடித்து தங்களது மகிழ்ச்சிகளை ஆரவாரமாக தெரிவித்து வருகின்றனர்.

இவர்கள் நினைத்தது போல் ரஜினி அரசியலுக்கு வரவில்லை என்று கூறியதால், அதனை கொண்டாடும் விதமாக மற்ற அரச தலைவர்களுக்கு வாழ்த்துக்களும் தெரிவித்து வருகின்றனர்.

all politicians
all politicians

அரசியலை நம்பி பிழைப்பு நடத்த இருந்த பல தொண்டர்களும் அப்பாடா நம்ம எப்படியோ தப்பித்து விட்டோம், நம்ம தலைவர் தான் ஆட்சிக்கு வருவார் இனி பிரச்சனை இல்லை நினைத்தபடி நாம் வாழலாம் என கூறிவருகின்றனர். இனி எங்கள் தலைவன் ஆட்சி தான் எனவும் முழக்கமிட்டு வருகின்றனர்.

நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் திரை உலகத்தை தாண்டி, அரசியலில் நான் பலவிதமான விமர்சனங்களை ரஜினி மீது வைத்துள்ளேன் அதற்காக வருந்துகிறேன் என்று கூறியுள்ளார். தற்போது ரஜினிகாந்த் எடுத்துள்ள முடிவுக்கு நல்ல வரவேற்பும் கிடைத்து வருகிறது.