fbpx
Connect with us

Cinemapettai

தான் பட்ட அவமானத்தை மேடையில் போட்டு உடைத்த ரஜினிகாந்த்.. பின்பு நடந்த தரமான சம்பவம்

Tamil Cinema News | சினிமா செய்திகள்

தான் பட்ட அவமானத்தை மேடையில் போட்டு உடைத்த ரஜினிகாந்த்.. பின்பு நடந்த தரமான சம்பவம்

தர்பார் இசை வெளியீட்டு விழா மிகவும் கோலாகலமாக நேரு அரங்கில் நடைபெற்றது. இதில் சினிமா பிரபலங்கள் கலந்து கொண்டு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தை பெருமைப்படுத்தி மற்றும் சாதனைகளை பாராட்டினார்கள்.

கடைசியாக சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் பேசத்தொடங்கினார், அப்போது ரசிகர்கள் தனது பிறந்தநாள் அன்று வீட்டிற்கு வர வேண்டாம் என்றும் நான் இருக்க மாட்டேன் என்றும் தெரிவித்தார். சினிமா துறையில் தான் தயாரிப்பாளர்களால் அவமானப்படுத்த பட்டுள்ளேன் அதில் ஒன்றுதான் என்னை ஊக்குவித்ததாக தெரிவித்தார்.

அந்த அவமானத்தில் நான் எடுத்த ஒரு சபதம் என்னவென்றால் கால்மேல் கால் போட்டுக்கொண்டு இந்த கோடம்பாக்கத்தில் வலம் வரவேண்டும் என்பதுதான். அதேபோல் வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட காரில் வந்து தான் அவமானப்பட்ட இடத்தில் ஸ்டைலாக புகை பிடிப்பதாக அவர் தெரிவித்தார்.

ரசிகர்கள் எனது மேல் வைத்துள்ள நம்பிக்கை வீணாகாது, கண்டிப்பாக தமிழ்நாட்டு மக்களுக்கு நான் துணை நிற்பேன் என்று மேடையில் அவர் கூறியது ரசிகர்களிடையே பெரும் வரவேற்பு பெற்றுள்ளது.  இந்த அரங்கத்தில் இசை வெளியீட்டு விழா நடத்துவதற்கு அனுமதி வழங்கிய தமிழ்நாடு அரசுக்கு மிகவும் நன்றி என்று தெரிவித்தார்.

https://twitter.com/rajinifans/status/1203307574612938753?s=20

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published.

To Top