Connect with us
Cinemapettai

Cinemapettai

rajinikanth-superstar

India | இந்தியா

ரஜினி சொன்ன அந்த புரட்சி இளைஞர் யார் தெரியுமா? என்ன ஒரு தொலைநோக்கு பார்வை

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் அரசியல் வருகையை எதிர்நோக்கி பல ரசிகர்கள் காத்துக் கொண்டிருந்தனர். இந்த நிலையில் கட்சி உறுப்பினர்கள் தான் கூறிய கொள்கைகளை ஏற்றுக் கொள்ளாத சூழ்நிலையில் கடந்த வாரம் பத்திரிக்கையாளர்களை நேரடியாக சந்தித்து மூன்று கொள்கைகளை வெளிப்படுத்தினார்.

அதை ரசிகர்கள் மற்றும் அரசியல் தலைவர்கள் இணையதளத்தில் நக்கலாகவும், மீம்ஸ் கிரியேட் செய்து எதிர்ப்புகளை தெரிவித்தனர். இந்த நிலையில் அவர் கூறிய கொள்கையில் ஒன்று இளைஞர்களை அரசியலுக்கு கொண்டுவர வேண்டும் என்பதுதான் தனது லட்சியம்.

அதாவது இளைஞர்கள் என்று அவர் குறிப்பிடுவது முதல்படியாக வாரிசு அரசியலில் முதலிடத்தில் தனது மருமகன் தனுஷ் பற்றி தெரிவித்ததாக இணையதளத்தில் செய்திகள் பரவி வருகிறது. ஆனால் அது உண்மை இல்லை எனவும் கூறுகின்றனர் ஏன் என்றால் அவர் வாரிசு அரசியலுக்கு எதிராக குரல் கொடுத்துள்ளார்.

dhanush-rajini

dhanush-rajini

இது ஒருபுறம் தீயாய் பரவிக் கொண்டிருக்கும் சூழ்நிலையில் தளபதி நடிப்பில் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் வெளிவந்த சர்கார் படத்தின் கிளைமாக்ஸ் காட்சிகளை பார்த்த மாதிரியே இருந்ததாகவும் கூறுகின்றனர்.

இரண்டு மலைகள் திமுக மற்றும் அதிமுகவை தாண்டி மூன்றாவதாக ஒரு கட்சி தமிழ்நாட்டில்  கால் பதிப்பது சாத்தியமா.? இப்போது புரட்சி வெடிக்க வில்லை என்றால் இனி எப்போதுமே வெடிக்காது என்ற கோபத்தில் ஆவேசத்திலும் சென்ற ரஜினி தற்போது வரை டுவிட்டரில் புரட்சி வெடிக்குமா என்று காத்துக் கொண்டிருக்கிறார்.

இதுவரை சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் பலருக்கு நிறைய நன்மைகள் செய்தாலும் ஏழை மக்களுக்கு அவருடைய மண்டபத்தில்  இலவசமாக திருமணம் நடத்தி வைத்தால் இன்னும் நல்ல பெயர் கிடைக்கும். ஆனால் அது சாத்தியமில்லை அல்லது சினிமா துறைகாவது அதிக டிக்கெட் விலையை பற்றி பேசினால் நன்றாக இருக்கும்.

கமலஹாசன், சீமான் போன்று மாவட்ட வாரியாக சென்று மக்களிடம் இருக்கும் குறைகளை கேட்டு அதற்குப் பின்னர் கட்சியின் கொள்கைகளை வெளியிட்டிருக்கலாம். தற்போதுவரை தானுண்டு தன் வேலை உண்டு என்று இருக்கும் ரஜினிகாந்துக்கு அரசியல் ஒரு  பொழுதுபோக்காக மாறி விடுமோ என்று ரசிகர்கள் புலம்புகிறார்கள். கடைசிவரை திண்ணையில் அமர்ந்துகொண்டு கட்சிக் கொள்கைகளை பேசிக்கொண்டிருக்க வேண்டியதான், அதை செயல்படுத்த முடியாது.

புரட்சி தனக்குத்தானே வெடித்துகொள்ளுமா.? இல்லை களத்தில் இறங்கி தமிழக மக்களுக்காக வேலை செய்தால் மட்டுமே வெடிக்குமா.?

கட்சிக்கு ஒரு தலைவன் ரஜினி, ஆட்சிக்கு ஒரு தலைவன் தனுஷ். ஆனால் ரஜினி கொள்கைப்படி தனுஷ் வர வாய்ப்பே இல்லை இருந்தாலும் நெட்டிசன்கள் இதெல்லாம் கேள்வியாக சமூக வலைதளங்களில் கேட்டு கொண்டே வருகின்றனர்.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

To Top