இனிமேல் இந்த மாதிரி கதைகள் வேண்டாம்.. ஸ்ட்ரிக்டாக சொன்ன ரஜினிகாந்த்

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் இனிவரும் தன்னுடைய படங்களில் தேவையில்லாத ரிஸ்க் எடுக்க வேண்டாம் என முடிவு செய்து அதற்கான வேலைகளில் இறங்கிவிட்டாராம். அதற்கு முதற்படியாக இயக்குனர்களுக்கு பல கண்டிஷன்கள் சென்றுள்ளது.

ரஜினி தற்போது சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் அண்ணாத்த படத்தில் நடித்து முடித்துள்ளார். வருகின்ற தீபாவளிக்கு அண்ணாத்த படம் தியேட்டர்களில் வெளியாக உள்ளது. சிறுத்தை சிவா இயக்கியுள்ள இந்த படத்திற்கு இமான் இசையமைத்துள்ளார்.

அண்ணாத்த படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு தற்போது கொல்கத்தாவில் நடைபெற்று வருகின்றன. ஆனால் ரஜினி முன்னரே தன்னுடைய காட்சிகள் மற்றும் டப்பிங் பணிகளை முடித்துக் கொடுத்துவிட்டு கர்நாடகாவில் உள்ள தன்னுடைய வீட்டில் தனிமையில் வசித்து வருகிறாராம்.

இந்த நேரத்தில்தான் பல வகையான யோசனைகளை மேற்கொண்டுள்ளார் ரஜினிகாந்த். அதில் இனிமேல் கேங்ஸ்டர் கதைகள், இளம் ரசிகர்களை கவரும் கதைகள் போன்றவற்றை சுத்தமாக ஒதுக்கி வைக்கலாம் என முடிவு செய்துவிட்டாராம்.

அதனைத் தொடர்ந்து இனி நடிக்கும் அனைத்து படங்களுமே கிராமத்து கதையம்சம் உள்ள படங்களாகவே இருக்கட்டும் என்பதிலும் தெளிவாக இருக்கிறாராம். சிறுத்தை சிவாவின் அண்ணாத்த படத்தில் நடித்த பிறகு இந்த முடிவை அவர் எடுத்துள்ளார் என்கிறார்கள். அந்த அளவுக்கு படம் சிறப்பாக வந்துள்ளதாம்.

அதனால்தான் இளம் இயக்குனர் தேசிங்கு பெரியசாமிக்கு அடுத்த படத்தை கொடுக்கலாமா என யோசித்தவர் தற்போது திடீரென ரூட்டை மாற்றி பக்கா கமர்சியல் இயக்குனர் பாண்டிராஜுக்கு கொடுத்து விட்டதாக கூறுகின்றனர். பாண்டிராஜ் தற்போது சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் சூர்யா நடிக்கும் எதற்கும் துணிந்தவன் படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்புகளில் பணியாற்றி வருகிறார். இதை முடித்து விட்டு ரஜினிக்கான படத்தை ரெடி செய்வார் என்கிறார்கள் பாண்டிராஜ் நெருங்கிய வட்டாரங்கள்.

rajinikanth-cinemapettai
rajinikanth-cinemapettai
Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்