Tamil Cinema News | சினிமா செய்திகள்
கமலிடமும் 100 கோடி சம்பளம் எதிர்பார்க்கும் ரஜினி.. படத்தால் நட்பில் ஏற்பட்ட விரிசல்
ரஜினி விரைவில் அரசியலில் இறங்க இருப்பதால் அவரது கடைசி படத்தை தனது நண்பரான கமல்ஹாசனின் தயாரிப்பில் நடிக்க விரும்புவதாக செய்திகள் வெளிவந்தது. அதற்கான அறிவிப்பை விரைவில் வெளியிடுவதாக கமல் விருது விழா ஒன்றில் தெரிவித்தார்.
தமிழ் சினிமாவைப் பொருத்தவரை நம்பர்-1 ஹீரோவாக இருப்பவர் ரஜினிகாந்த். இவரது சம்பளம் சமீபகாலமாக 100 கோடியை தொட்டு விட்டது. இந்நிலையில் விரைவில் அரசியலுக்கு வர இருப்பதால் சினிமாவுக்கு முழுக்கு போடும் எண்ணத்தில் உள்ளாராம் ரஜினி.
கமலஹாசன் ராஜ்கமல் ஃபிலிம்ஸ் தயாரிப்பில் ரஜினியை வைத்து லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ஒரு படம் உருவாக்க இருந்தார். ஆனால் அந்த படத்திலும் ரஜினி காந்த் சுமார் 100 கோடி வரை சம்பளம் கேட்டு உள்ளதாக தெரிகிறது. ரஜினி, கமல் இணைந்து நடிப்பதாகவும் செய்திகள் வெளிவந்த வண்ணம் உள்ளன.
கமலஹாசன் பேருக்குதான் ரஜினி படத்தின் தயாரிப்பாளராக இருக்கிறாராம். மொத்த செலவும் மற்ற மூன்று தயாரிப்பாளர்களும் சேர்ந்து தயாரிக்க உள்ளனர். இடையில் இந்த படத்தை சன் பிக்சர்ஸ் தயாரிக்கவும் வாய்ப்புகள் இருந்தது. நண்பரின் படத்தில்கூட சம்பளத்தில் அட்ஜஸ்ட்மெண்ட் இல்லையா என கோலிவுட் வட்டாரம் கவலையில் உள்ளதாம்.
காசு விஷயத்தில் எவ்வளவு கண்டிப்பாக இருக்கும் ரஜினிகாந்த் எப்படி அரசியலுக்கு வந்து மக்களுக்கு நல்லது செய்வார் எனவும் ஒரு கூட்டம் கூறிக் கொண்டே இருக்கிறது. இதனால் ரஜினிக்கும் கமலுக்கும் சிறிய மனஸ்தாபம் ஏற்பட்டு விட்டதாக நெருங்கிய வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
