விஜய் சேதுபதியுடன் நடிக்கும் ரஜினிகாந்தின் உறவினர்

நடிகர்விஜய் சேதுபதி தற்போது பல படங்களில் நடித்து வரும் நிலையில் அவர் நடித்த தர்மதுரை விரைவில் திரைக்கு வருகிறது. இப்படத்தை சீனுராமசாமி இயக்க, ஸ்டுடியோ 9 நிறுவனம் தயாரித்துள்ளது.

மேலும் இப்படத்தில் ரஜினிகாந்தின் உறவினர் அதாவது Y.Gee.மகேந்திரனின் மகள் மதுவந்தி போலீஸ் அதிகாரியாக நடித்துள்ளார். இது பற்றி அவர் கூறுகையில், ஏற்கனவே எனக்கு முத்து படத்தில் ரஜினியுடன் நடிக்க வாய்ப்பு வந்த போது செய்யவில்லை.

தற்போது என்னுடைய ‘பெருமாளே ‘ நாடகத்தை” பார்த்து சீனுராமசாமி என்னை தேர்வு செய்துள்ளார். அதுமட்டுமில்லாமல் ஆர்யாவுடன் கடும்பன் படத்திலும் நடித்து வருகிறேன் என்று சந்தோஷமாக தெரிவித்துள்ளார்.

Comments

comments