இந்த வசனத்தை நான் பேசவே மாட்டேன்.. கடைசி வரை அடம்பிடித்த ரஜினி, அப்படி என்ன வசனம் அது?

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் பெரும்பாலும் கமர்சியல் படங்களையே அதிகமாக தேர்ந்தெடுத்து நடிப்பார். சென்டிமென்ட், கிளாஸ் இதை எல்லாம் தன்னால் முடிந்தவரை செய்ய முயற்சிக்க மாட்டார். மேலும் எப்பொழுதுமே கொஞ்சம் சர்ச்சைக்குரிய கதைகளில் நடிக்க தயங்குவார். இதற்கு ரொம்ப முக்கியமான காரணம் என்னவென்றால் தன்னால் பணம் சம்பந்தப்பட்ட கலைஞர்களோ, தயாரிப்பாளரோ பாதிக்கப்படக்கூடாது என்பதால் தான்.

ரஜினிகாந்த் பாட்ஷா படத்திலிருந்து கொஞ்சம் அதிரடி ஆக்சன் பஞ்ச் வசனங்களை பேச ஆரம்பித்தார். இது ரசிகர்களிடையே மிகப்பெரிய வரவேற்பு பெற்றது. ஒவ்வொரு படத்திலும் ரஜினி என்ன டயலாக் சொல்லுவார் என்று ரசிகர்கள் பெரிதும் எதிர்பார்க்க ஆரம்பித்தனர். நான் ஒரு தடவை சொன்னா நூறு தடவை சொன்ன மாதிரி, என் வழி தனி வழி போன்ற வசனங்கள் எல்லாம் இப்படி பிரபலமானவை தான்.

Also Read:ரஜினி இந்த படத்தை தான் தன்னுடைய கடைசி படம் என நினைத்தார்.. உண்மையை சொன்ன இயக்குனர்

அருணாச்சலம், முத்து, படையப்பா போன்ற படங்களில் ரஜினி கொஞ்சம் அரசியல் பேசவும் ஆரம்பித்தார். அதிலும் முத்து மற்றும் படையப்பா படம் முழுக்க முழுக்க அரசியல் வசனங்களுடன் தான் அமைந்திருக்கும். முத்து படத்தில் வரும் நான் எப்ப வருவேன் எப்படி வருவேன் தெரியாது என்ற வசனத்தின் மூலம் அரசியலுக்கு வருவதை கூட ரஜினி உறுதி செய்து விட்டதாக அவருடைய ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.

இப்படி பல அரசியல் வசனங்களை தைரியமாக பேசிய ரஜினிகாந்த் ஒரு குறிப்பிட்ட வசனத்தை பேசவே மாட்டேன் என்று ரொம்பவும் அடம்பிடித்து இருக்கிறார். ரஜினி நடிப்பில் வெளியான கோச்சடையான் படத்தில் தான் அந்த வசனம் இடம் பெற்று இருக்கிறது. ரஜினியின் எதிரியில் இருக்கும் அதிகாலையில் நீ சூரியனை பார்க்க முடியாது என்று சொல்லும் பொழுது ரஜினி அதற்கு அந்த சூரியன் கூட என்னைக் கேட்டால் தான் எழும், விழும் என்று சொல்ல வேண்டுமாம்.

Also Read:லீக் ஆனது தலைவர் 170 படத்தின் முழு கதை.. பெரும் அப்செட்டில் இருக்கும் சூப்பர் ஸ்டார்

ரஜினி இந்த வசனத்தை கேட்டவுடன் இது வேறொரு அரசியல் கட்சியின் சின்னத்தை குறிப்பது போல் இருக்கிறது நான் பேசவே மாட்டேன் என்று சொல்லிவிட்டாராம். நடிகர் ரமேஷ் கண்ணா, ரஜினிகாந்த் எவ்வளவு சமாதானப்படுத்தியும் அவர் பேசவே முடியாது என்று சொல்லிவிட்டாராம். கிட்டத்தட்ட ஒன்றரை மணி நேரம் சமாதானத்திற்குப் பிறகும் ரஜினி ஒப்புக்கொள்ளாததால் வசனம் அந்த காட்சியில் இருந்து நீக்கப்பட்டிருக்கிறது.

படையப்பா படத்தில் அன்றைய முதலமைச்சர் ஜெயலலிதாவை எதிர்ப்பது போல் பல வசனங்கள் பேசிய ரஜினிகாந்த், இந்த படத்தின் போது சூரியனுக்கு எதிரான வசனத்தை கூட பேச மாட்டேன் என்று மறுத்திருக்கிறார். மேலும் இயக்குனர் கே எஸ் ரவிக்குமாரிடம் நீங்கள் ஏற்கனவே முத்து படத்தில் கொடுத்த வசனங்களால் தான் என் மீது அரசியல் எதிர்பார்ப்பு அதிகமானது, இனி இது போன்ற வசனங்கள் வேண்டாம் என்று சொல்லிவிட்டாராம்.

Also Read:ரஜினியை மரியாதை இல்லாமல் திட்டிய பிரபல நடிகை.. பகிரங்கமாக மன்னிப்பு கேட்க வைத்த ரசிகர்கள்