Tamil Cinema News | சினிமா செய்திகள்
ரஜினி பட வாய்ப்பை தட்டி தூக்கிய டான்ஸ் மாஸ்டர்.. இதுக்குத்தான் இவ்வளவு நாளா பொடி வச்சாரா
தற்போது பேய் படங்களின் வெற்றியுன் மூலம் தமிழ் சினிமாவில் கொடிகட்டி பறக்கும் நடிகர் ராகவா லாரன்ஸ். மூன்று மதங்களை சேர்த்து கோயில் கட்டி வருவது அனைவரும் அறிந்ததே, சில மாதங்களுக்கு முன்பு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தை சந்தித்து கதை ஒன்றை கூறியுள்ளார்.
அதுமட்டுமில்லாமல் கூடவே அவர் போட்ட கண்டிஷன் தான் வினையாக முடிந்துவிட்டது. அதாவது சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துக்கு தம்பியாக நடிப்பேன் என்று கூறியது மட்டுமில்லாமல் நீங்க எவ்வளவு சம்பளம் கேட்டாலும் நான் தாரேன் என்று கூறியது.
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துக்கு இவர் கூறியது ஆணவமாக தோன்றியுள்ளது. இதனால் சில தினங்களுக்கு ராகவாலாரன்ஸின் ஒதுக்கி வைத்துள்ளார். அவர் சந்திப்பதற்கு நேரம் கேட்கும்போதெல்லாம் முடியாது என்று கூறியுள்ளனர்.
ஆனால் தற்போது ஒரு சுவாரஸ்யமான சம்பவம் நடந்து உள்ளது, அது என்னவென்றால் அண்ணாத்த படப்பிடிப்பின் போது சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தை சந்தித்து உள்ளார் ராகவா லாரன்ஸ். புதிதாக ஒரு கதையைக் கூறி அதுக்கு சம்மதம் வாங்கி விட்டாராம்.
ரஜினிகாந்த் 170வது படத்திற்கு சம்மதத்திற்கு முக்கிய காரணம் என்னவென்றால் அக்ஷய் குமாரை வைத்து காஞ்சனா ரீமேக் செய்து கொண்டிருப்பதால் ராகவா லாரன்ஸுக்கு தற்போது தமிழ் சினிமாவில் மார்க்கெட் எகிரி விட்டதாம்.
அதுமட்டுமில்லாமல் தமிழ் சினிமாவில் தனக்கென்று ஒரு இடத்தை பிடித்து வைத்துள்ளார். ராகவா லாரன்ஸ் இந்த படத்தின் மொத்த வருமானத்தில் 30 சதவீதம் தனக்கு கொடுக்க வேண்டும் என்று கட்டளையும் போட்டுள்ளாராம். இதனை நம்ப தகுந்த சினிமா செய்தி தொடர்பாளரான பிஸ்மி தெரிவித்துள்ளார்.
ஏற்கனவே லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் நடிக்க இருந்தது தள்ளிப்போகும் சூழ்நிலையில் இருப்பதால் இதற்கு ஒப்புக்கொண்டு இருப்பாரோ என்று ரசிகர்கள் குழம்பிப்போய் உள்ளனர். 100 கோடி சம்பளத்திற்கு ராகவா லாரன்ஸ் தாக்குப் பிடிப்பார் மற்றும் இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளிவரும் வரை காத்துக் கொண்டிருக்கிறோம்.
தலைவரைப் பற்றி யாரு அவதூறாக பேசினாலும் உடனே தன் பாணியில் பதில் அளித்து விடுவார்கள். அதுமட்டுமில்லாமல் ராகவா லாரன்சை தூக்கிவிட்டது சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அதனால் இதை விஸ்வாசம் என்று கூறுவதா அல்லது தொழில் சாமர்த்தியம் என்று கூறுவதா தெரியவில்லை.
மற்றொருபுறம் அரசியலுக்கு வர காத்துக்கொண்டிருக்கும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துக்கு இவர் படைத்தளபதியாக கூட வாய்ப்புகள் உள்ளதாம்.
