Politics | அரசியல்
பாஜகவை கலாய்த்த ரஜினி.. அடுத்த சில நிமிடங்களிலேயே நடந்த மாற்றம்
ரஜினி ஐயா.. உங்களுக்கு என்னதான் ஆச்சு என மீம் போட்டு கலாய்க்கும் அளவுக்கு கெத்தான பேட்டிக்கு பின்பு மீண்டும் கொடுத்த பேட்டி அவரை டொக்காக்கிவிட்டது. ஆமாம். நேற்று முழுவதும் தலைவர் ரஜினிகாந்த் மட்டுமே அனைத்து நியூஸ் சேனல்களுக்கும் தீனி போட்டு உள்ளார்.
கமலஹாசன் அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு அவரது அலுவலகத்தில் கே.பி. பாலச்சந்தர் சிலை திறக்கப்பட்டது. இதில் கலந்து கொண்ட ரஜினி செய்தியாளர்களை சந்தித்தபோது, திருவள்ளுவர் சிலையில் சாயம் பூசியதைப் பற்றி கேள்வி எழுப்பப்பட்டது.
அதற்கு என் மீதும் சில பாஜக காரர்கள் காவியை பூச நினைக்கிறார்கள் என்றும், நானும் மாட்ட மாட்டேன் திருவள்ளுவரும் மாட்ட மாட்டார் என்று கெத்தாக கூறிவிட்டு சென்றார். தலைவருக்கு தைரியம் வந்துவிட்டது என ரசிகர்கள் நினைத்துக் கொண்டிருந்தபோது, சுவற்றில் அடித்த பந்து போல் திரும்பி வந்து பாஜகவுக்கு ஆதரவாக பேசினார்.
அவர் கூறியதாவது, எனக்கு பாஜக சாயம் பூச வேறு சிலர் நினைக்கின்றனர் எனவும், தமிழகத்தின் தலைமையில் வெற்றிடம் இருப்பதாக மீண்டும் செய்தியாளர்களை பார்த்து கூறிவிட்டு சென்றார்.
இதனால் அவரது ரசிகர்கள் ரஜினி அரசியலுக்கு வருவாரா? மாட்டாரா? நம்பலாமா? நம்ப கூடாதா? என தலைவர் ஸ்டைலிலேயே புலம்பி வருகின்றனர்.
