Tamil Cinema News | சினிமா செய்திகள்
ரஜினியின் இந்த முடிவால் சூடு பிடிக்கும் தேர்தல் களம்.. திக்குமுக்காடும் மத்திய, மாநில கட்சிகள்!
ரஜினிகாந்த் கட்சி தொடங்க போவதில்லை என்ற அறிக்கை வெளியிட்டவுடன் ஆளும் கட்சி மற்றும் எதிர்க்கட்சிகள் மகிழ்ச்சியில் உள்ளனர். இது ஒருபுறம் இருந்தாலும் சிலருக்கு இந்தத் தேர்தலில் சறுக்கல் தான் ஏற்படும்.
ஏனென்றால் திமுகவின் எதிர்பார்ப்பு படி அதிமுகவின் ஓட்டுக்களை ரஜினிகாந்த் பிரித்துவிடுவார் என்று நினைத்தனர். ஆனால் இந்த அறிக்கையின் மூலம் ஆசையில் மண் விழுந்தது போல் ஆகிவிட்டது தற்போது தேர்தல் களத்தில் பெரும் திருப்புமுனையாக அமைந்துள்ளது.
மேலும் ரஜினி கட்சி ஆரம்பிப்பது பற்றி பேசிய போது பல அரசியல்வாதிகளும் அய்யோ என்ன செய்யப்போகிறோம் என பயந்து ரஜினிகாந்த் பற்றி புறம் பேசி வந்தனர். மேலும் இவர் சொல்லும் கருத்துக்களுக்கு எதிர்மறையாக பல அரசியல்வாதிகள் விமர்சித்தும் கிண்டல் செய்வதுபடி கருத்துக்களையும் கூறி வந்தனர்.
ஆனால் அதையெல்லாம் கண்டுகொள்ளாமல் ரஜினிகாந்த் மக்களுக்கு சேவை செய்வதே முக்கியம் எனக் கருதி அடுத்த அடுத்த அரசியல் கட்டத்திற்கு சென்றார்.
ரஜினிகாந்த் அரசியலுக்கு வருவதை பார்த்த சில அரசியல்வாதிகள் எப்படியாவது இவரை தன் பக்கம் இழுத்து ரஜினி மூலம் ஆதிக்கம் செலுத்த வேண்டும் என ஒரு சில அரசியல்வாதிகள் திட்டம் செய்து வைத்திருந்தனர்.

rajinikanth
தற்போது ரஜினிகாந்தை வைத்து அரசியல் செய்வதற்கு திட்டம் வைத்திருந்த அரசியல்வாதிகள் எப்படி ஆட்சியை நடத்த போகிறோம் என பயந்து போய் உள்ளனர். பல அரசியல்வாதிகள் சந்தோஷமாக உள்ள நிலையில் ஒரு சில அரசியல்வாதிகள் மட்டும் கவலையில் உள்ளனர்.
ஆனால் மக்கள் ரஜினிகாந்திடம் எதிர்பார்த்தது தனிப்பட்ட ஒரு அரசியல் மற்றும் சமுதாயத்தில் மாற்றம் வரக்கூடிய அரசியல் என்பது குறிப்பிடத்தக்கது.
