Connect with us
Cinemapettai

Cinemapettai

முதலில் புரட்சி வந்தால் கட்சி வருமா? கட்சி வந்தால் புரட்சி வருமா? ரஜினி என்ன சொல்ல வருகிறார்

rajini

Tamil Nadu | தமிழ் நாடு

முதலில் புரட்சி வந்தால் கட்சி வருமா? கட்சி வந்தால் புரட்சி வருமா? ரஜினி என்ன சொல்ல வருகிறார்

ஆட்சிக்கு ஒரு தலைவன் கட்சிக்கு ஒரு தலைவன் என்ற ரஜினிகாந்தின் பாலிசியை இன்று வெளிப்படையாக மேடையில் தெரிவித்துவிட்டார். பத்திரிக்கையாளர்களை சந்திக்க சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மார்ச் 12 தேர்வு செய்ததற்கு முக்கிய காரணம் உள்ளது. இதே தேதியில் தான் பாபா படம் வெளிவந்தது, தர்பார் படத்தில் வில்லனை பழி வாங்குவதற்கு மார்ச் 12ஆம் தேதி தான் குறிப்பார். ஜாதக ரீதியாக 12 சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துக்கு ராசியான நம்பர்.

rajinikanth

rajinikanth

இன்று தமிழகத்தில் ஒரு திருப்புமுனை அமைந்து விடாதா என்று ஆயிரக்கணக்கான ரசிகர்கள் ரஜினிகாந்தின் வீட்டின் வாசலில் காத்துக் கொண்டிருந்தனர். சூப்பர்ஸ்டார் வெளியே வந்தவுடன் மலர் தூவி அவரை பத்திரிகையாளர் சந்திப்பிற்கு அனுப்பி வைத்தனர்.  தலைவா தலைவா என்று ரசிகர்களின் கோஷத்தை காதில் கேட்டபடி ரஜினிகாந்த் உற்சாகத்தில் கிளம்பினார்.

rajinikanth

rajinikanth

மிகுந்த எதிர்பார்ப்புடன் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தனது உரையை தொடங்கினார், எதிர்க் கட்சி திமுக மற்றும் ஆளும் கட்சி அதிமுக யார் பதவிக்கு வந்தாலும் ஊழல் தலைவிரித்து ஆடுகிறது என்று கூறியுள்ளார். கிட்டத்தட்ட 60 ஆயிரத்திற்கும் மேலான தொண்டர்கள் தேர்தல் நேரத்தில் வேலை செய்வதாகவும் அவர்கள் ஜெயித்து ஆட்சிக்கு வந்தபின் பதவியை வைத்து ஊழல் செய்து வருவதாகவும் தெரிவித்தார்.

10 ஆண்டுகள் ஆட்சி புரிந்துவரும் அதிமுக மற்றும் பத்து ஆண்டுகள் ஆட்சியில் இல்லாவிட்டாலும் கருணாநிதியின் அரசியல் சாம்ராஜ்யத்தை உறுதி செய்வதற்கு ஸ்டாலின் கண்டிப்பாக வெற்றி பெற வேண்டும்  என்ற சூழ்நிலை உருவாகியுள்ளது. இதனால் இரண்டு மாபெரும் கட்சிகளுடன் மோதுவதற்கு மக்களின் ஆதரவு மிக முக்கியம் என்று ஆவேசத்துடன் பேசிய காட்சிகள் ரசிகர்களை சிந்திக்க வைத்தது.

“சிஸ்டத்தை சரி செய்யாமல் அரசியலுக்கு வருவது மீன் குழம்பு வைத்த பாத்திரத்தை கழுவாமல் சக்கரை பொங்கல் வைப்பது போன்றது”

rajinikanth

rajinikanth

ரஜினிகாந்த் 25 வருடங்களாக அரசியலுக்கு வருவதாக சில தலைவர்கள் கிண்டலடித்து, மீம்ஸ் கிரியேட் பண்ணி வருகின்றனர். இதனை தெளிவுபடுத்துவதற்கு பிரஸ்மீட்டின் போது வீடியோ ஒன்றை வெளியிட்டார். அந்த வீடியோவில் 2017 டிசம்பர் மாதம் 31ஆம் தேதி அரசியலுக்கு தான் வருவதாக கூறி இருக்கிறார். அந்த வீடியோ மூலம் 2017இல் தான் அரசியலுக்கு வருவேன் என்று கூறி இருப்பதை உறுதி செய்து விட்டார்.

முதல்வர் ஆசையா எனக்கா, அது என் ரத்தத்திலேயே இல்லை என்று ரஜினிகாந்த் ஆணித்தனமாக தெரிவித்திருப்பது ரசிகர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதனால் கண்டிப்பாக ரஜினிகாந்த் தலைமை ஏற்க மாட்டார், கட்சிக்கு ஒரு தலைவன் ஆட்சிக்கு ஒரு தலைவன் என்ற தீர்மானத்தில் தான் உள்ளார்.

rajinikanth

rajinikanth

இதனால் கட்சி உறுப்பினர்களை தேர்வு செய்வதில் மிகவும் தெளிவாக உள்ளேன், அதில் 40 வயதிற்கு  உள்ள இளைஞர்களை சேர்த்து அரசியல் களத்தில் இறங்கப் போகிறேன். மற்ற கட்சிகளில் இன்னும் வாய்ப்பு கிடைக்காத நல்ல தலைவர்கள் இருப்பதாகவும் அவர்களை நாம் சேர்த்துக் கொள்ளலாம் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

சில தினங்களுக்கு முன்பு கட்சி கூட்டத்தில் ஆட்சிக்கு ஒரு தலைவன் கட்சிக்கு ஒரு தலைவன் என்ற பாலிசியை தொண்டர்கள் ஏற்றுக்கொள்ளவில்லை. இதனால்தான் இந்த பத்திரிக்கையாளர் சந்திப்பை வெளிப்படையாக மக்களிடம் கொண்டு போய்விடலாம் என்று  முடிவெடுத்துள்ளேன்.

rajinikanth

rajinikanth

இந்த அரசியல் தொடக்கம் சீமான் கூறியிருப்பது போன்று உள்ளது தமிழகத்தை புரட்டிப் போடுவதற்கு இது சரியான தருணம் என்பதை ரஜினிகாந்த் உறுதியாக உள்ளார். 2021ல் புரட்சி வெடிக்க வேண்டும் இல்லை என்றால் தமிழ்நாட்டில் இனி எப்போதுமே அரசியல் மாற்றம் இருக்காது. அடுத்த வருடமே நாம் ஆட்சியை பிடிக்க வில்லை என்றால் இன்னும் ஐந்து வருடம் கழித்து எப்படி மாறப்போகிறது என்று ஆவேசத்துடன் பேசினார்.

கட்சிக்கு ஒரு தலைவன் ஆட்சிக்கு ஒரு தலைவன் என்ற கொள்கை இந்தியா முழுவதும் அமைய வேண்டும் என்பதே எனது நீண்ட நாள் கனவு என்று தெரிவித்தார். இன்று நடைபெற்ற பத்திரிக்கையாளர் சந்திப்பு இந்தியாவையே திரும்பி பார்க்க வைத்துவிட்டது என்பதில் எந்த ஒரு சந்தேகமும் இல்லை. செய்தியாளர்களின் கேள்விகளுக்கு தற்போது பதிலளிக்க விரும்பவில்லை என்று கூறியபடி ரஜினிகாந்த் விடைபெற்றுக் கொண்டார்.

சென்சார் செய்யாத செய்திகள், வீடியோக்கள் பார்க்க சினிமாபேட்டை Youtube-ல் Subscribe பண்ணுங்க.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published.

To Top