Connect with us

Cinemapettai

rajini-keerthi

Tamil Cinema News | சினிமா செய்திகள்

ரஜினிக்கு ஜோடியாக கீர்த்தி சூரேஷ்?

ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் தர்பார் படத்தில் நடிகர் ரஜினிகாந்த் நடித்துள்ளார். இந்த படத்தின் படப்பிடிப்ப அண்மையில் நிறைவு பெற்றது. விரைவில் இந்த படத்தை திரைக்கு கொண்டுவருவதற்கான பணிகள் நடந்து வருகிறது.

இதையடுத்து அஜித்தின் விஸ்வாசம் படத்தை இயக்கிய சிறுத்தை சிவா இயக்கத்தில் புதிய படத்தில் நடிக்க ரஜினிகாந்த் முடிவு செய்துள்ளார். இந்த படம் ரஜினிக்கு 168வது திரைப்படம் ஆகும். இந்த படத்தை சன்பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது.

டி இமான் இசையமைக்கும் இந்த படத்தில் நடிகர் சூரியும் நடிக்கிறார். இதேபால குஷ்புவும் நடிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. அதுமட்டுமின்றி மீனாவும் நடிக்க ஒப்பந்தமாகி உள்ளாராம்.

இந்நிலையில் ரஜினிக்கு ஜோடியாக கீர்த்தி சுரேஷை நடிக்க வைக்க பேச்சுவார்த்தை நடந்து வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. இந்த படத்தில் கீர்த்தி சுரேஷ் ரஜினிக்கு ஜோடியாக நடிப்பாரா என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

இத கண்டிப்பா படிங்க

To Top