வியாழக்கிழமை, டிசம்பர் 12, 2024

லியோவை பற்றி முதல் முறையாக வாயை திறந்த ரஜினி.. என்னதான் போட்டி இருந்தாலும் கழுகு கழுகு தான்

Rajinikanth – Leo : சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தன்னுடைய 40 ஆண்டுகளுக்கும் மேலான சினிமா வாழ்க்கையின் மிகப்பெரிய ஜாம்பவான்களுடன் எல்லாம் போட்டியிட்டு இருக்கிறார். கடந்த சில வருடங்களாகவே ரஜினிக்கு போட்டியாக விஜய் இருப்பதாக சொல்லி வருகிறார்கள். இதைப் பற்றி அவர்கள் இருவருமே வாயைத் திறந்து எந்த கருத்தும் சொல்லியது கிடையாது.

ரஜினியின் சமீபத்திய ரிலீஸ் ஆன ஜெயிலர் படம் பட்டி தொட்டி எங்கும் பெரிய ஹிட் அடித்தது. இந்த படத்தின் இசை வெளியீட்டு விழாவில் கூட ரஜினி பேசியது எல்லாமே விஜய்க்கு பதிலடி தான் என கிளப்பி விடப்பட்டது. அதிலும் ஜெயிலர் படம் கிட்டத்தட்ட 600 கோடி வசூல் செய்து விட்டதால் அடுத்த விஜய் நடிப்பில் வெளியாக இருக்கும் லியோ படம் ஆயிரம் கோடியை தொட்டுவிட வேண்டும் என விஜய் ரசிகர்கள் சபதமிட்டு கொண்டு இருக்கிறார்கள்.

ரஜினிகாந்த் இதுபோன்ற சலசலப்புக்கு எல்லாம் எப்போதுமே பதில் கொடுத்தது கிடையாது. ஏனென்றால் அவருக்கு சினிமாவில் அனுபவம் அதிகம். விஜய் மட்டுமில்லை அவர் எந்த ஒரு நடிகரையுமே போட்டியாக நினைத்தது இல்லை என்பதை பல இடங்களில் வெளிப்படையாக சொல்லி இருக்கிறார். தற்போது பல சர்ச்சைகளுக்கு பின்னால் முதல்முறையாக லியோ படம் பற்றி வாயைத் திறந்து பேசி இருக்கிறார்.

ஜெய் பீம் பட இயக்குனர் ஞானவேல் இயக்கத்தில் தற்போது ரஜினி தன்னுடைய 170 ஆவது படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார். இதற்கான படப்பிடிப்பு நெல்லை மாவட்டத்தைச் சேர்ந்த வள்ளியூர் மற்றும் பண குடி பகுதிகளில் நடைபெற்று வருகிறது. இந்த படப்பிடிப்பு சமயத்தில் அவ்வப்போது ரஜினி பத்திரிக்கையாளர்களை சந்தித்து வருகிறார்.

அப்படி ஒரு சந்திப்பில் இன்று ரஜினியிடம் லியோ படம் பற்றி கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு ரஜினி, விஜய் நடித்த லியோ படம் வெற்றி அடைய வேண்டும் என ஆண்டவனை பிரார்த்திக்கிறேன் என்று சொல்லி இருக்கிறார். ரஜினியின் இந்த பதில் எல்லோரையுமே ஆச்சரியத்தில் ஆழ்த்தி இருக்கிறது. பெரிய மனிதன் எப்போதுமே பெரிய மனிதன் தான் என மீண்டும் ஒருமுறை நிரூபித்து விட்டார் ரஜினிகாந்த்.

இருந்தாலும் ரஜினி ரசிகர்கள் ஒரு பக்கம் எங்களுடைய தலைவரை வைத்து லியோவிற்கு விளம்பரம் தேடுகிறீர்கள் என கமெண்ட் செய்து வருகிறார்கள். அதற்கு விஜய் ரசிகர்கள் பதிலுக்கு லியோ, லோகேஷ் கனகராஜ் படம் என்பதால் தான் ரஜினி இப்படி சொல்லி இருக்கிறார். இந்த படம் ஜெயித்தால் தான் தலைவர் 171 படத்தின் மீது ஹைப் இருக்கும் என்பதால் தான் ரஜினி இப்படி சொல்லி இருக்கிறார் என கமெண்ட் செய்து வருகிறார்கள்.

- Advertisement -

Trending News