Tamil Nadu | தமிழ் நாடு
அடுத்தடுத்து அதிரடி முடிவுகளை எடுக்கும் ரஜினி! நாளை நடக்க போகும் முதல் சம்பவம்
சென்னை: நாளை சென்னையில் உள்ள ராகவேந்திரா மண்டபத்தில் ரஜினி மக்கள் மன்றத்தின் மாவட்டச் செயலாளர்களுக்கான கூட்டம் நடைபெற உள்ளது.
குடியுரிமை திருத்த சட்டம் மற்றும் என்.ஆர்.சி ஆகியவை தொடர்பாக நடிகர் ரஜினிகாந்த் தெரிவித்த கருத்து இஸ்லாமியர்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியது. இதை உணர்ந்த ரஜினி தனத நிலைப்பாட்டை விளக்குவதற்காக இஸ்லாமிய அமைப்பினரை சந்தித்து பேச தயாராக இருப்பதாக ரஜினிகாந்த் கூறியிருந்தார்.
அதன்பேரில் சென்னை போயஸ் கார்டனில் உள்ள அவரது இல்லத்திற்கு உலமா சபை குருக்கள் உள்பட இஸ்லாமிய பெரியவர்களை சந்தித்து பேசினார். இதன்பின்னர் நடிகர் ரஜினிகாந்த் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், எப்போதும் அன்பும் ஒற்றுமையும் அமைதியுமே ஒரு நாட்டின் பிரதான நோக்கமாக இருக்க வேண்டும் என்ற மத குருமார்கள் கருத்தை நானும் ஆமோதிக்கிறேன்.
நாட்டில் அமைதியை நிலைநாட்ட தன் தகுதிக்குட்பட்ட அனைத்தையும் செய்ய எப்போதும் தயாராக இருப்பதாக தெரிவித்திருந்தார். இந்நிலையில் நடிகர் ரஜினிகாந்த் ரசிகர் மன்றத்தை சேர்ந்த மாவட்டச் செயலாளர்களை சந்திக்க உள்ளார்.
இந்தச் சந்திப்பு வியாழன் காலை 10 மணிக்கு நடைபெற உள்ளதாக தகவல் தெரிவிக்கின்றன. இந்தக் கூட்டத்தில் கலந்துரையாடி சில முக்கிய பிரச்னைகள் குறித்து ரஜினிகாந்த் விவாதிக்க வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது.
