Connect with us
Cinemapettai

Cinemapettai

annatha-rajini

Videos | வீடியோக்கள்

லீக் ஆன பெயரை கெட்டியாக பிடித்து கொண்ட சன் நிறுவனம்.. அதிரடி இசையில் வெளிவந்த ரஜினி168 பட டைட்டில்

ரஜினியின் தலைவர் 168 படத்துக்கு மன்னவன் என்று பெயரை சிவா நினைத்திருப்பதாக சொல்கிறார்கள். முனனதாக அண்ணாத்த என்ற தலைப்பும் வைக்கலாம் என சிவா யோசித்து வருவதாக சொல்கிறார்கள்.

சிறுத்தை சிவா தல அஜித்தை வைத்து வீரம், வேதாளம், விவேகம், விஸ்வாசம் என தொடர்ந்து 4 படங்களை இயக்கினார். அவருக்கு தற்போது ரஜினியின் பட வாய்ப்பு கிடைத்திருக்கிறது. சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் இப்படத்தில் ரஜினிகாந்த், கீர்த்தி சுரேஷ், குஷ்பு, மீனா, சூரி, சதீஷ் உள்ளிட்ட பலர் நடித்து வருகிறார்கள். இதை ‘ தலைவர் 168’. என அழைத்து வருகிறார்கள்.

இப்படத்தின் வேலைகள் படு ஸ்பீடாக நடைபெற்று வருகிறது. சித்தார்த் இப்படத்தில் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. ஏற்கனவே சித்தார்த் கமலின் இந்தியன் 2 படத்திலும் நடித்து வருகிறார்.

தலைவர் 168 படத்தில் நடிகை கீர்த்தி சுரேஷ் ரஜினிக்கு ஜோடி இல்லையாம். , சித்தார்த் தான் கீர்த்தி சுரேஷுக்கு ஜோடி என்ற தகவல் உலா வருகிறது. தற்போது சினிமா பேட்டையில் ஏற்கனவே கூறியதை போல் சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் ரஜினிகாந்த் நடிக்கும் படத்தின் தலைப்பு அண்ணாத்த என வைக்கப்பட்டுள்ளது.

அண்ணாத்த டைட்டில் வீடியோ

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

To Top