ரஜினியின் கடைசி இரண்டு பட இயக்குனர்கள் இவர்கள்தான்.. அதோடு சினிமாவுக்கு முழுக்காமே!

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அண்ணாத்த படத்தை முடித்துவிட்டு சிகிச்சைக்காக அமெரிக்கா சென்று மீண்டும் சென்னைக்குத் திரும்பிவிட்டார். அண்ணாத்த படத்தின் படப்பிடிப்புகள் மொத்தமும் முடிவடைந்த நிலையில் அடுத்ததாக ரஜினியின் நடவடிக்கை என்னவாக இருக்கும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பாக உள்ளது.

ரஜினியின் அரசியல் சலசலப்புக்களுக்கு பிறகு அண்ணாத்த படம் வெளியாவதால் இந்த படம் வசூல் ரீதியாக மிகப்பெரிய வெற்றியை பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் அண்ணாத்த படம் தான் ரஜினியின் கடைசி படம் எனவும் செய்திகள் வெளியானது.

அதற்கு காரணம் அவருக்கு சமீபத்தில் உடல் நிலை குறைவு ஏற்பட்டதால் இனி ரஜினி சினிமாவில் நடிக்க மாட்டார் என்ற செய்திகள் உலா வந்து கொண்டிருந்தன. ஆனால் அமெரிக்காவுக்கு சென்று வந்த ரஜினி முன்னரை விட தற்போது மிகவும் உற்சாகமாக இருப்பதாக தெரிகிறது.

இருந்தாலும் இன்னும் சில வருடங்கள் மட்டுமே படங்களில் நடிக்கலாம் என முடிவு செய்துள்ளாராம். ரஜினியின் 168 வது படமாக உருவாகியிருக்கிறது அண்ணாத்த. அதனைத் தொடர்ந்து 169 மற்றும் 170 போன்ற படங்களை யார் இயக்கப் போகிறார்கள், யார் தயாரிக்கப் போகிறார்கள் என்ற செய்திகள் கிடைத்துள்ளன.

ரஜினியின் அடுத்த படமான 169 வது படத்தை ஏஜிஎஸ் என்டர்டெயின்மென்ட் நிறுவனம் தயாரிக்க உள்ளதாம். மேலும் இந்த படத்தை கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் படத்தை இயக்கிய தேசிங்கு பெரியசாமி என்பவர் இயக்க உள்ளாராம்.

அதோடு கோலிவுட்டில் ரஜினியின் கடைசி படமாக அவருடைய 170வது படத்தை எதிர்பார்க்கின்றனர். இந்த படத்தை பெரும்பாலும் அவரது மருமகன் தனுஷ் இயக்கவே அதிக வாய்ப்பு இருக்கிறதாம். மேலும் அவருடைய இரண்டு மகள்களும் சேர்ந்து இந்த படத்தை தயாரிக்க உள்ளார்களாம். ஆனால் ஒரு சிலரோ தற்போது ஒரு படத்திற்கு 100 கோடி சம்பளம் வாங்கும் ரஜினி அவ்வளவு சீக்கிரத்தில் சினிமாவை விட்டு போக மாட்டார் என்கிறார்கள். ம்ம்ம்ம்ம்ம் பொறுத்திருந்து பார்ப்போம், அண்ணாத்த ஆட்டத்தை!

rajinikanth-cinemapettai
rajinikanth-cinemapettai
Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்