fbpx
Connect with us
Cinemapettai

Cinemapettai

அடுத்தடுத்து மூன்று படங்கள்.. யாரும் எதிர்பார்க்காத இயக்குனர்கள்.. மாஸ் பண்ணும் ரஜினி

rajini-super-star

Tamil Cinema News | சினிமா செய்திகள்

அடுத்தடுத்து மூன்று படங்கள்.. யாரும் எதிர்பார்க்காத இயக்குனர்கள்.. மாஸ் பண்ணும் ரஜினி

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் சிறுத்தை சிவா இயக்கத்தில் அண்ணாத்த படத்தில் நடித்து வருகிறார். இதில் பல முன்னணி நட்சத்திரங்கள் நடித்து வருகின்றனர். ஏற்கனவே கூறியபடி சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அண்ணாத்த படப்பிடிப்பின்போது ராகவா லாரன்ஸ் இடம் கதை கேட்டு அதை உறுதியும் செய்துவிட்டாராம்.

ஆனால் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளிவரும் வரை காத்துக் கொண்டிருக்க வேண்டும். இது மட்டுமில்லாமல் இன்னும் இரண்டு இயக்குனர்களை சூப்பர் ஸ்டார் உறுதி செய்துள்ளாராம்.

கே.எஸ்.ரவிக்குமார் மற்றொன்று அயன் படத்தை இயக்கிய கே.வி. ஆனந்த் மூன்றாவதாக ராகவா லாரன்ஸ் இணைந்துள்ளார் என்பதை சினிமா பத்திரிக்கையாளர் பிஸ்மி உறுதிப்படுத்தியுள்ளார்.

இந்த லிஸ்டை வைத்து பார்க்கும்போது லோகேஷ் கனகராஜ் இருப்பாரா என்பது கேள்விக்குறியாகிவிட்டது. அரசியல் கட்சி தொடங்கி விடுவாரா என்று ஏக்கத்துடன் இருக்கும் ரசிகர்களுக்கு இந்த செய்தி ஒரு அதிர்ச்சியாக தான் இருக்கும்.

ஏனென்றால் அடுத்தடுத்து 3 படங்களை நடிக்க உள்ள சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அரசியலில் நுழைவது சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது. கட்சிக்கு ஒரு தலைவன் ஆட்சிக்கு ஒரு தலைவன் என்ற கொள்கையை ஏற்றுக் கொள்ளாத தொண்டர்கள் எனக்கு தேவையில்லை என்று வெளிப்படையாக தெரிவித்திருந்தார்.

ஆனால் தற்போது சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அரசியல் வாழ்க்கையில் முழு மூச்சாக இருப்பாரா? மாட்டாரா? தான் பேசியது இப்பதான் சுழற்சி போல ஆரம்பித்து சுனாமியாக உருவாகி வருகிறது என்று பேட்டி ஒன்றில் கூறியிருப்பார்.

ஆனால் தற்போது நடப்பதை வைத்து பார்க்கும்போது அரசியல் சாத்தியமில்லை என்பதை மன தைரியத்துடன் ஏற்றுக்கொள்ள வேண்டிய சூழ்நிலை தான். சிஸ்டம் சரியில்லை என்று கூறிய ரஜினிகாந்த் அரசியலை கோட்டைவிட்டு விடுவார் என்று சமூக வலைத்தளத்தில் விமர்சித்து வருகின்றனர்.

இதற்கு முன்னதாக கமல் தயாரிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் எடுக்கப்படும் படம்தான் கடைசி படம்  என்ற செய்தியும் பொய்யாகி விட்டது.

என்னதான் அரசியல், மக்கள், ரசிகர் என்று இருந்தாலும் பொழப்ப பார்த்துதான் ஆகவேண்டும்.  எழுச்சி என்பது வெறும் வார்த்தையாக போய்விடுமோ என்று கட்சித் தொண்டர்களும் யோசித்து வருகின்றனர். விரைவில் இதனைப் பற்றிய அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளிவரும் என்று  எதிர்பார்க்கப்படுகிறது.

சென்சார் செய்யாத செய்திகள், வீடியோக்கள் பார்க்க சினிமாபேட்டை Youtube-ல் Subscribe பண்ணுங்க.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published.

To Top