சொல்றதையும் செய்யமாட்டேன் செய்யறதையும் சொல்லமாட்டேன். அரசியல் இல்லாமல் புதிய முறையில் சேவை செய்யப் போகும் ரஜினி

ரஜினிகாந்த் கட்சி தொடங்குவதாக அறிவித்த அன்றிலிருந்து பல ரசிகர்களும் எப்போது தமிழ்நாட்டில் மாற்றம் வரப்போகிறது என எதிர்பார்த்துக் காத்திருந்தனர்.

மேலும் ரஜினிகாந்த் பல மேடைகளிலும் கண்டிப்பாக ஒரு மாற்றத்தை உருவாக்குவோம் என முழக்கமிட்டு வந்தார். இதனால் உற்சாகம் அடைந்த ரசிகர்கள் வருகிற தேர்தலிலாவது கண்டிப்பாக ஒரு மாற்றத்தை கொண்டுவர முடியும் என திட்டவட்டமாக நம்பியிருந்தனர்.

ஆனால் இன்று ரஜினி வெளியிட்டுள்ள அறிக்கையில் தமிழ் மக்கள் அனைவரும் சற்று கவலையில் உள்ளனர் என்றே கூறலாம். அதாவது அவர் அறிக்கையில் நான் கட்சி தற்போது தொடங்குவதில்லை என்றும் மேலும் அரசியலுக்கு வராமல் என்னால் என்ன செய்ய முடியுமோ அது கண்டிப்பாக உங்களுக்காக செய்வேன் எனவும் அதில் தெரிவித்திருந்தார்.

பல நாட்களாக கட்சி தொடங்குவார் என எதிர்பார்த்த மக்களுக்கு சற்று ஏமாற்றம் அளித்துள்ளது. இதனால் வருகிற தேர்தலில் எந்த மாதிரியான மாற்றத்தை கொண்டு வரப் போகிறோம் என மக்களும் பயந்து போயுள்ளனர்.

rajinikanth
rajinikanth

ரஜினிகாந்த் கட்சி தொடங்க வில்லை என அறிவிப்பை வெளியிட்டதால் விரைவில் ரஜினி டிரஸ்ட் ஒன்றை உருவாக்கி அதன் மூலம் மக்களுக்கு சேவை செய்ய தொடங்குவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் “சொல்றது தான் செய்வேன், செய்யறது தான் சொல்வேன்” என அவர் வசனத்தின்படி தற்போது அரசியல் மூலம் மக்களுக்குச் சேவை பண்ண முடியாமல் இருந்தாலும் டிரஸ்ட் மூலம் கண்டிப்பா இவர் மக்களுக்கு சேவை செய்வார் என எதிர்பார்க்கப்படுகிறது.