பரதன் இயக்கத்தில் விஜய் இரண்டு வேடங்களில் நடித்து வரும் 60-வது படத்திற்கு ‘எங்க வீட்டு பிள்ளை’ தான் இந்த படத்தின் டைட்டில் என வதந்தி கிளம்பி அதனை படக்குழுவினர் மறுத்த செய்தியை பார்த்தோம்.

இந்நிலையில் படக்குழுவினர்களுக்கு நெருக்கமானவர்களிடம் இருந்து இந்த படத்தின் டைட்டில் குறித்த ரகசிய தகவல் தற்போது கிடைத்துள்ளது. இந்த படத்தின் டைட்டில் விஜய்யின் முந்தைய படங்களின் டைட்டில்களான கத்தி, துப்பாக்கி, தெறி, ஜில்லா வரிசையில் ஒரே வார்த்தை உள்ள டைட்டில் என்று கூறப்படுகிறது.

அதிகம் படித்தவை:  தெறி உண்மையில் 100 கோடி வசூல் இல்லை- தென்னிந்தியாவின் முன்னணி தளம் பளீர்

ஆனால், பிரபல நாளிதழ் ஒன்றில் வெளியான தகவல் படி, மணிரத்னம் இயக்கத்தில் ரஜினி நடித்த தளபதி படத்தின் தலைப்பை வைக்கலாம் என்று விஜய்யே டைரக்டர் பரதனுக்கு யோசனை தெரிவித்துள்ளாராம். கதைப்படி, இந்த ‛தளபதி’ டைட்டில் பொருத்தமாக இருக்கும் என்பதால் இதையே விரைவில் அறிவிப்பார்கள் என்று அப்படக்குழுவினர் தெரிவிக்கின்றனர். ஆக, இளையதளபதி விஜய் விரைவில் தளபதி ஆகிறார்.