Rajinkanth-Fans-Meeting

அனைத்து மாவட்ட ரசிகர்மன்ற பொறுப்பாளர்களும் இந்த கூட்டத்தில் தவறாது கலந்து கொள்ள வேண்டும் என்று அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

முன்பெல்லாம் தனது ரசிகர்களை அடிக்கடி சந்தித்து, படமெடுத்துக் கொள்வதை வழக்கமாக வைத்திருந்த ரஜினிகாந்த், தேவையற்ற அரசியல் சர்ச்சைகளைத் தவிர்க்க கடந்த 10 ஆண்டுகளாக இத்தகைய சந்திப்புகளைக் குறைத்துக் கொண்டார்.

ஆனாலும் தனது பிறந்த நாளில், புத்தாண்டு தினங்களில் சென்னை போயஸ் கார்டனில் உள்ள வீட்டின் முன்னால் திரளும் ரசிகர்களை பார்த்து வணக்கம் தெரிவித்து செல்வதை வழக்கமாக வைத்து இருக்கிறார். தங்களை அழைத்து பேசும்படி ரஜினிகாந்துக்கு ரசிகர்கள் தொடர்ந்து கடிதங்கள் அனுப்பியும் அது ஏற்கப்படாமலே இருந்தது.

ஆனால் தற்போது புதிய திருப்பமாக ரசிகர்மன்ற ஆலோசனை கூட்டத்தை கூட்ட ரஜினிகாந்த் முடிவு செய்துள்ளார்.

வருகிற 2-ந்தேதி காலை 9.30 மணிக்கு சென்னை கோடம்பாக்கத்தில் உள்ள ராகவேந்திரா திருமண மண்டபத்தில் இந்த கூட்டம் நடைபெற உள்ளது. இதில் அனைத்து மாவட்டங்களில் இருந்தும் மாவட்ட ரசிகர் மன்ற தலைவரும் செயலாளரும் தவறாது கலந்து கொள்ள வேண்டும் என்று அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இது ரசிகர்கள் மத்தியில் ஆர்வத்தையும் எதிர்பார்ப்பையும் ஏற்படுத்தி உள்ளது. ஆலோசனை கூட்டத்தில் என்ன முடிவுகள் எடுக்கப்படும் என்பது உறுதியாக தெரியவில்லை.