fbpx
Connect with us

Cinemapettai

ரஜினிக்கு பல லட்சம் வரி போட்ட மாநகராட்சி.. அவ்ளோ பணம் கொடுக்க முடியாது என கூறிய சூப்பர் ஸ்டார்

Tamil Cinema News | சினிமா செய்திகள்

ரஜினிக்கு பல லட்சம் வரி போட்ட மாநகராட்சி.. அவ்ளோ பணம் கொடுக்க முடியாது என கூறிய சூப்பர் ஸ்டார்

என்னதான் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மிகப் பெரிய நடிகராக இருந்தாலும் சமீப காலமாக கந்து வட்டி போன்ற சில சர்ச்சைகளில் மாட்டி வருகிறார்.

அதுமட்டுமில்லாமல் அவர் நடத்தி வரும் பள்ளிக்கூடத்திற்கு வாடகை தராத பிரச்சனை ஒன்று நீண்ட காலமாக நடைபெற்று வருகிறது.

எப்போதுமே சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் காசு விஷயத்தில் உஷாராக இருப்பார் என்பது அனைவருக்கும் தெரிந்ததுதான். தன்னிடம் இருந்து ஒரு பைசா வெளியில் போனாலும் அதை உற்று நோக்கி கொண்டிருப்பார்.

அந்த வகையில் சென்னை மாநகராட்சி ரஜினிகாந்த் நடத்திவரும் ராகவேந்திரா திருமண மண்டபத்திற்கு சுமார் 6.5 லட்சம் சொத்து வரி போட்டுள்ளது.

அதனை எதிர்த்து ரஜினிகாந்த் 6 மாதமாக செயல்படாத மண்டபத்திற்கு எப்படி இவ்வளவு வரி போடலாம் என உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்துள்ளார்.

இதனை விசாரித்த நீதிபதிகள் உடனடியாக ரஜினிகாந்தை எச்சரித்துள்ளனர். மற்ற திருமண மண்டபம் நடத்துபவர்கள் வரி கட்டும் நிலையில் உங்களுக்கு என்ன என்பது போல் ரஜினி தரப்பை வெளுத்து வாங்கி உள்ளார்கள்.

rajini-tax

rajini-tax

இதனால் வெலவெலத்துப் போன ரஜினிகாந்த் உடனடியாக அந்த நோட்டீசை திரும்பப் பெற்றுக் கொள்ளப் போவதாக அறிவித்துள்ளார்.

Continue Reading
To Top