ஐந்து நாள் சுற்றுப்பயணமாக இந்தியா வந்துள்ள மலேசிய பிரதமர் நஜிப் ரஜாக் இன்று போயஸ் கார்டன் இல்லத்தில் ரஜினியை சந்தித்து பேசினார்.

Najib Razak- Rajinikanth Familyஇந்த சந்திப்பு குறித்து விளக்கமளித்துள்ள ரஜினிகாந்த், மரியாதை நிமித்தமாகவும், கபாலி படத்திற்கு வழங்கிய ஒத்துழைப்புக்காக நன்றி தெரிவிக்கவே சந்தித்ததாகவும் தெரிவித்துள்ளார்.

மலேசியாவில் சந்திக்க நேரம் கிடைக்காத காரணத்தினால் தற்போது சந்தித்து பேசியதாகவும் கூறியுள்ளார்.

மலாக்காவுக்கு தூதராக நியமிக்கப்பட உள்ளதாக வெளியான தகவல் வதந்தி என்றும், ரசிகர்களை சந்திப்பதில் எவ்வித அரசியலும் இல்லை எனவும் தெரிவித்துள்ளார்.