Connect with us

Tamil Cinema News | சினிமா செய்திகள்

அமெரிக்காவில் அசால்ட் பண்ணும் தலைவர்.. வைரலாகும் ரஜினியின் லேட்டஸ்ட் புகைப்படங்கள்

rajinikanth-01

தமிழ் சினிமாவில் கிட்டத்தட்ட 40 ஆண்டுகாலமாக நம்பர் 1 இடத்தில் இருக்கும் நடிகர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த். இந்த 40 வருட காலத்தில் ரஜினியுடன் பல நடிகர்கள் போட்டி போட்டாலும் அனைவரையும் தன்னுடைய படங்களின் வெற்றி மூலம் ஓட விட்டவர்.

கடைசியாக வெளியான ரஜினியின் தர்பார் படம் சரியாக போகாததால் அடுத்ததாக எப்படியாவது ஒரு வெற்றிப்படத்தை கொடுத்து மீண்டும் மார்க்கெட்டை பிடித்து விட வேண்டும் என்பதற்காக சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் சிறுத்தை சிவா இயக்கும் படத்தில் நடித்து வருகிறார்.

இந்த படத்திற்கு பல குளறுபடிகள் வந்தாலும் தற்போது ஒரு வழியாக அண்ணாத்த படத்தின் மொத்த படப்பிடிப்பும் முடிவடைந்து விட்டது. மேலும் தன்னுடைய டப்பிங் பணிகள் முதற்கொண்டு அனைத்தையும் முடித்துக் கொடுத்துவிட்டார் ரஜினிகாந்த்.

rajinikanth-latest-photo-01

rajinikanth-latest-photo-01

அதனைத் தொடர்ந்து மருத்துவ சிகிச்சைக்காக அமெரிக்கா சென்றுள்ளார். அமெரிக்கா செல்லும் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகியதைத் தொடர்ந்து சமீபத்தில் கூட அமெரிக்காவில் மருத்துவமனையிலிருந்து ரஜினிகாந்த் வெளியில்வரும் புகைப்படம் இணையத்தில் வைரல் ஆனது.

இந்நிலையில் அமெரிக்காவில் ரஜினி தங்கியிருக்கும் இடத்திற்கு அவருடைய ரசிகர்கள் சிலர் சென்றுள்ளனர். அப்போது அவர்களுடன் உரையாடி புகைப்படங்கள் எடுத்துக் கொண்டது தற்போது இணையத்தில் சக்கைபோடு போட்டு வருகிறது.

rajinikanth-latest-photo-02

rajinikanth-latest-photo-02

சில மாதங்களுக்கு முன்பு உடல்நிலை சரியில்லாததால் சோர்வாக காணப்பட்ட ரஜினிகாந்த் தற்போது பார்ப்பதற்கு மிகவும் ஆரோக்கியமாக இருப்பது போன்று தெரிகிறது. இதனால் ரஜினி ரசிகர்களும் பழையபடி உற்சாகத்திற்கு வந்துவிட்டனர்.

Continue Reading
To Top