rajinikanth-kamal-haasanதமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களாக ரஜினியும், கமலும் திகழ்கின்றனர். ரஜினி கமர்ஷியல் படங்களில் பயணித்து வருகிறார். கமல்ஹாசன் தமிழ் சினிமாவை அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்வதற்கான பரிசோதனை முயற்சிகளில் ஈடுபட்டு வருகிறார்.

2ஓ படத்தில் ரஜினிக்கு வில்லனாக கமலை நடிக்க வைக்க, ஷங்கர் எவ்வளவோ முயற்சிகள் செய்தும் பலனில்லாமல் போய்விட்டது. ஆமிர்கான், அர்னால்டு என்று பலரின் பெயரும் அடிபட்டு தற்போது அக்ஷய்குமார் அப்படத்தில் வில்லனாக நடித்து வருகிறார்.

பாரீஸ் நகரில் நடைபெற்ற விழாவில், பத்திரிகையாளர்களின் கேள்விக்கு கமல்ஹாசன் பதிலளித்தார் .அப்போது

“நானும், ரஜினியும் சம்பளம் வாங்கிக்கொண்டு இணைந்து நடித்தால், படமெடுக்கப் பணம் இருக்காது. அந்த ஒரு காரணத்தினால் தான் நாங்கள் இருவரும் சேர்ந்து நடிப்பதை தவிர்த்து வருகிறோம். மணிரத்னம் படத்தில் நடிக்க வேண்டும் என்பது எனது நீண்ட நாள் ஆசை. எப்போது நடக்கும் என்று தெரியவில்லை. நாங்கள் இருவரும் இணைந்து பணிபுரியும் காலம் வரும்போது கண்டிப்பாக சேர்ந்து பணியாற்றுவோம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here