கோவா நட்சத்திர ஹோட்டல் ஒன்றில்  இந்து முறைப்படி, நடிகை சமந்தா – தெலுங்கு நடிகர் நாக சைதன்யா திருமணம் நடைபெற்றது. காதலர்களான நாக சைதன்யாவும் சமந்தாவும்  சுற்றத்தினர் முன்னிலையில் திருமண பந்தத்தில் இணைந்தார்கள்.

நேற்று இந்து முறைப்படி நடைபெற்ற இந்தத் திருமண விழாவில் நெருங்கிய உறவினர்கள் மற்றும் திரையுலக நண்பர்கள் என 200 பேருக்கும் குறைவாகவே கலந்து கொண்டார்கள்.

kasturi

கிறிஸ்தவ முறைப்படி இவர்களது திருமணம் நடைபெற்றது. திரையுலகினர் பங்கேற்பதற்காக அக்டோபர் மாத இறுதியில் ஐதராபாத்தில் வரவேற்பு நிகழ்ச்சி நடைபெறவுள்ளது. இந்நிலையில், சமந்தா திருமணத்திற்கு திரைப் பிரபலங்கள் வாழ்த்து மழை பொழிந்து வருகிறார்கள்.

நடிகை சமந்தாவுக்கும் நாக சைதன்யாவிற்கும் சமீபத்தில் திருமணம் நடந்த பிறகு. இந்த நிகழ்விற்கு பிறகு பத்திரிக்கையாளர் ஒருவர் சமந்தாவிடம் திருமணத்திற்கு பிறகும் சினிமாவில் நடிப்பீர்களா என்று கேட்டுள்ளார். அதற்கு சமந்தா நடிப்பேன் என்று பதிலளித்துள்ளார்.

Kasturi

இதை அறிந்த கஸ்தூரி தனது ட்விட்டரில் ” திருமணத்திற்கு பிறகு நடிப்பீர்களா?.. என்று சமந்தாவிடம் கேட்பவர்கள் ஏன் அதே கேள்வியை நாக சைதன்யாவிடம் கேட்கவில்லை என்று கருத்து தெரிவித்திருந்தார்.

உடனே நெட்டிசன்கள் அவரை தாக்க ஆரம்பித்துவிட்டனர். “உங்களுடன் நடித்த ரஜினியும் , கமலும் இன்னும் நடித்துவருகிறார்கள் உங்களால் முடியவில்லையே ஏன்? என்று ஒருவர் கேட்க, அதற்கு கஸ்தூரி ” நானும் அதைத்தான் ஏனென்று கேட்கிறேன்..

தாத்தாக்களை ஹீரோக்களாக நடிப்பதை ஏற்றுக்கொள்ளும் நீங்கள், திருமணமான பெண்கள் ஹீரோயின்களாக நடிப்பதை ஏற்றுக்கொள்வதில்லையே ஏன்? என்று கேட்டிருக்கிறார்.

இதை அறிந்த ரஜினி மற்றும் கமல் ரசிகர்கள் சமூகவளைதலங்களில் பொங்கி எழுகின்றனர் இதனால் சமூகவளைதலமே ஒரு கலவர பூமியாக மாறியது. கஸ்தூரி யாரை குறிப்பிடுகிறார் என்று விவாதம் தொடர்ந்து வருகிறது சமூகவளைதலங்களில்.

சும்மாவே கதரவிடுவாங்க ரசிகர்கள் இப்ப ஒரு நியூஸ் தொக்கா கிடைச்சிருக்கு சும்மா விடுவாங்களா என்ன , ரசிகர்கள் டாபிக்கில் சிக்கிகொண்டார் கஸ்தூரி.