fbpx
Connect with us

ஏப்ரல் 14ல் விஜய்யுடன் இணைந்த ரஜினிகாந்த்

ஏப்ரல் 14ல் விஜய்யுடன் இணைந்த ரஜினிகாந்த்

rajinikanth-vijayஇளையதளபதி விஜய், சமந்தா, எமிஜாக்சன் ஆகியோர் நடிப்பில் ராஜாராணி படத்தின் இயக்குனர் அட்லியின் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் தெறி. இப்படத்தின் டீசர் மற்றும் டிரைலர் ரசிகர்களிடம் மாபெரும் வரவேற்பை பெற்றுள்ள நிலையில் வரும் ஏப்ரல் 14ம் தேதி தமிழ் புத்தாண்டன்று ரிலீஸ் செய்ய படக்குழுவினர் திட்டமிட்டுள்ளனர்.

இப்படத்தை தயாரித்துள்ள கலைபுலி S.தாணு சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் நடித்துள்ள கபாலி படத்தையும் தயாரித்துள்ளார். இப்படத்தை மெட்ராஸ் படத்தின் இயக்குனர் பா.ரஞ்சித் இயக்கியுள்ளார். இந்நிலையில் இப்படத்தின் டீஸர் தெறி படத்தின் இடைவேளைக் காட்சியின்போது இணைக்கப்பட்டுள்ளதாக நம்பத் தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இதனால் தெறி படம் பார்க்கும்போது இளைய தளபதி விஜய் மற்றும் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் இருவரும் கூட்டு சேர்ந்து திரையரங்கை தெறிக்க வைக்கபோவது மட்டும் உறுதி.

Continue Reading
Advertisement
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More in

Advertisement

Trending

To Top