Connect with us

Cinemapettai

கமல் தயாரிப்பில் ரஜினியை இயக்கும் இளம் இயக்குனர்.. டபுள் மாஸ்

rajini-kamal

Tamil Cinema News | சினிமா செய்திகள்

கமல் தயாரிப்பில் ரஜினியை இயக்கும் இளம் இயக்குனர்.. டபுள் மாஸ்

நான் இருக்கும் வரை தமிழ் சினிமாவில் நான்தான் ராஜா என மீண்டும் மீண்டும் நிரூபித்துக் கொண்டிருக்கிறார் தலைவர் ரஜினிகாந்த். சமீபத்தில் பொங்கல் வெளியீடாக திரைக்கு வந்த தர்பார் திரைப்படம் வசூலில் உச்சகட்ட வெற்றியடைந்தது. தற்போது வரை இந்த படத்தின் வீரியம் குறைய வில்லை.

அதனைத் தொடர்ந்து சிறுத்தை சிவா இயக்கத்தில் ரஜினிகாந்த், மீனா, குஷ்பு, சூரி, சதீஷ், கீர்த்தி சுரேஷ் ஆகியோர் நடிக்கும் தலைவர் 168 திரைப்படம் சன் பிக்சர்ஸ் தயாரிக்க 2020 தீபாவளிக்கு வெளியாக உள்ளது. இந்த படத்திற்கும் ஏகப்பட்ட எதிர்பார்ப்புகள் எகிறி கிடக்கின்றன.

விரைவில் ரஜினிகாந்த் அரசியலில் களமிறங்க இருப்பதால் சினிமாவுக்கு முழுக்கு போட்டு விடும் எண்ணத்தில் உள்ளார். இதனால் தனது கடைசி தலைவர் 169 படத்தை தனது நீண்டகால நண்பரான கமல் தயாரிப்பில் நடிக்க விரும்புவதாக தனது நட்பு வட்டாரத்தில் கூறி வருகிறார்.

கிட்டத்தட்ட இந்த செய்தி உறுதியாகத்தான் தெரிகிறது. சமீபத்தில் நடைபெற்ற இவர்களின் சந்திப்பு அந்த செய்தியை உறுதியாகியுள்ளது. ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் தயாரிப்பில் ரஜினி நடிக்க உள்ளார். இந்த படத்தை தளபதி விஜய்யின் மாஸ்டர் படத்தை இயக்கி வரும் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் இருப்பதாக கிட்டத்தட்ட செய்திகள் உறுதி ஆகி விட்டன.

சமீபத்தில் தனியார் தொலைக்காட்சி விருது விழாவில் கமல் கையால் விருது பெற்றார் லோகேஷ் கனகராஜ். அப்போது கமல் விரைவில் மிகப் பெரிய அறிவிப்பு வெளியாகும் என புதிர் போட்டார். அதற்கு விடை தற்போது தெரியவந்துள்ளது.

லோகேஷ் கனகராஜ் கமல்ஹாசனின் தீவிர ரசிகர் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் விரைவில் கமல் தயாரிப்பில் ரஜினி நடிக்கப்போகும் படத்தின் அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

சினிமாவில் தன்னுடைய கடைசி படத்தை கமல் தான் தயாரிக்க வேண்டும் என ரஜினி விரும்புவதாக அவரின் நட்பு வட்டாரங்களிடம் தெரிவித்துள்ளார்.

ரஜினி சினிமாவில் இருக்கும் வரை அவர்தான் ராஜா.!

சென்சார் செய்யாத செய்திகள், புகைப்படம், வீடியோ பார்க்க Telegram App-ல் Follow பண்ணுங்க.

Click to comment

Leave a Reply

Your email address will not be published.

To Top