fbpx
Connect with us

Cinemapettai

திரும்பவும் அஜித் கூடவா? ஒரு தடவையே போதும்.. சிவாவுக்கு கட்டளையிட்ட ரஜினி

Tamil Cinema News | சினிமா செய்திகள்

திரும்பவும் அஜித் கூடவா? ஒரு தடவையே போதும்.. சிவாவுக்கு கட்டளையிட்ட ரஜினி

தமிழ் சினிமாவில் கடந்த ஆண்டு பொங்கல் தினத்தன்று சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மற்றும் தல அஜித் ஆகிய இருவரும் நேருக்கு நேர் மோதிக் கொண்டனர். இதில் விஸ்வாசம் திரைப்படம் தமிழ்நாடு அளவில் நல்ல வசூல் பெற்றது என்ற செய்தி பரவியது. உலக அளவில் பேட்ட படம் முன்னிலை என்ற செய்தியும் பரவியது.

விஸ்வாசம் வசூல் செய்தது உண்மை ஆனால் பேட்ட படத்தை தாண்டியதா என்றால்? இல்லை என்றே கூறுகின்றனர். அதனால்தான் சன் நிறுவனம் பேட்ட வசூலை வெளிப்படையாக அறிவித்தது. ஆனால் விஸ்வாசம் அறிவிக்கவில்லை.

சூப்பர் ஸ்டார் ரஜினி திரை வரலாற்றில் அவரை வசூலில் மிஞ்சியவர்கள் இல்லை. அவருடன் போட்டியாக இப்படி பேசுவதே அனைவருக்கும் ஆச்சர்யம்தான். இந்த போட்டியைத்தான் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் விரும்பவில்லை என்ற செய்தி வெளிவந்துள்ளது. மேலும் சிவாவிடம் தீபாவளிக்கு முன்னதாகவே தலைவர் 168 படத்தை வெளியிட வேண்டும் எனவும் தெரிவித்துள்ளாராம்.

மீண்டும் 2020 ஆம் ஆண்டு தீபாவளியன்று தல அஜித்தின் வலிமை மற்றும் ரஜினிகாந்தின் தலைவர் 168 திரைப்படம் மோத இருப்பதாக தகவல்கள் வெளிவந்தது. இதனால் மீண்டும் இரு ரசிகர்களிடையே தற்பொழுது இருந்தே போட்டி ஏற்பட்டுள்ளது என கிளம்பியது சர்ச்சை.

இதனால் தலைவர் 168 படத்தை தயாரிக்கும் சன் பிக்சர்ஸ் நிறுவனமும் படத்தின் பணியை வேகமாக பணியாற்ற உத்தரவிட்டுள்ளது. இதனால் 2020 ஆம் ஆண்டு ஆயுத பூஜை தினத்தன்று தலைவர் 168 படம் திரைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

உலக அளவில் ரஜினிகாந்த் பெரிய பெயர் பெற்று இருக்கிறார். ஆனால் தற்போதைய நிலவரப்படி தமிழ்நாட்டில் தல அஜித் அவருக்கு இணையாக வளர்ந்து வருகிறார் என்றுதான் சொல்ல வேண்டும். அதற்கு விஸ்வாசம் படத்தின் வசூலே ஒரு சான்று.

நம்ம ஊர்ல நம்ம நடிகர்கள் வசூல் பண்ணா நமக்குதானே கெத்து!

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published.

To Top