Connect with us

Cinemapettai

ரசிகருக்காக முதல்முறையாக ரிப்பன் வெட்டிய ரஜினிகாந்த்

Cinema News | சினிமா செய்திகள்

ரசிகருக்காக முதல்முறையாக ரிப்பன் வெட்டிய ரஜினிகாந்த்

rajinikanthகடந்த 40 ஆண்டுகளாக திரையுலகில் வலம் வரும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் இதுவரை தமிழகத்திலோ அல்லது வெளிமாநிலங்களிலோ எந்த ஒரு கடை திறப்பு நிகழ்ச்சியிலும் கலந்து கொண்டது கிடையாது. ஆனால் முதல்முறையாக தனது ரசிகருக்காக மலேசியாவில் ஒரு கடையை திறந்து வைத்துள்ளார் ரஜினிகாந்த்

‘கபாலி’ படத்தின் மலேசிய படப்பிடிப்புக்கு சென்றுள்ள சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், Datuk Abdul Malik Dasthageer என்பவருடைய கடையை நேற்று ரிப்பன் வெட்டி திறந்துள்ளார். மேலும் இவர்தான் ‘கபாலி’ படத்தின் மலேசிய ரிலீஸ் உரிமையை பெற்றவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் ‘கபாலி’ படத்தின் படப்பிடிப்பு இம்மாத இறுதியுடன் முடிந்துவிடும் என்றும் அடுத்த மாதம் முதல் ஷங்கரின் ‘2.0’ படத்தின் படப்பிடிப்பில் அவர் கலந்து கொள்வார் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

அதிகம் படித்தவை

To Top