fbpx
Connect with us

‘கபாலி’ கடைசி நாளில் கடவுளாக மாறிய ரஜினி

‘கபாலி’ கடைசி நாளில் கடவுளாக மாறிய ரஜினி

kabaliசூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி வரும் ‘கபாலி’ படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் மலேசியாவில் முடிவடைந்து படக்குழுவினர் சென்னை திரும்பினர் என்பதை ஏற்கனவே பார்த்தோம். இந்நிலையில் ‘கபாலி’ படத்தின் கடைசி படப்பிடிப்பு தினத்தில் ரஜினிக்கு படக்குழுவினர் இணைந்து நினைவுப்பரிசு ஒன்றை வழங்கியுள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளது.

இந்தியாவின் புகழ்பெற்ற முனிவர்கள் மற்றும் கடவுள்கள் அடங்கிய புகைப்படம் ஒன்றை படக்குழுவினர் ரஜினிக்கு நினைவுப்பரிசாக வழங்கினர். இந்த புகைப்படத்துடன் காட்சியளித்த ரஜினியும் தங்களுக்கு ஒரு கடவுளாகத்தான் தெரிந்தார் என படக்குழுவினர் கூறினர்.

ரஜினிகாந்த், ராதிகா ஆப்தே, தன்ஷிகா, கலையரசன், தினேஷ் உள்பட பலர் நடித்துள்ள இந்த திரைப்படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார். அட்டக்கத்தி, மெட்ராஸ் படங்களை இயக்கிய பா.ரஞ்சித் இந்த படத்தை இயக்கியுள்ளார். இந்த திரைப்படம் தேர்தலுக்கு பின்னர் மே இறுதியில் வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

Continue Reading
You may also like...
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More in

Advertisement

Trending

To Top