நடிகர் ரஜினியிடம் இயக்குனர் கௌதம் மேனன் கதை கூறியிருப்பதாகவும், அவரை வைத்து விரைவில் படம் எடுக்க இருப்பதாகவும் செய்தி வெளியாகியுள்ளது.

நடிகர் ரஜினி ‘கபாலி’ படத்திற்கு பின்னர் மீண்டும் ரஞ்சித் இயக்கத்தில் ஒரு படத்தில் நடிக்கவுள்ளார். இந்தப் படம் மும்பையில் வாழ்ந்த ஹாஜி மஸ்தான் அலியின் கதையை அடிப்படையாகக் கொண்டது என்று செய்தி வெளியானது. ஆனால், அந்தக் கதை அல்ல என்று தனுஷ் தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. இந்தப் படத்திற்கான சூட்டிங் விரைவில் தொடங்கப்படவுள்ளது. இந்தப் படத்தை தனுஷ் தயாரிக்கிறார்.

அதிகம் படித்தவை:  இதென்ன ஆர்யாவுக்கு வந்த சோதனை?உஷார் ஆர்யா!

இந்நிலையில் தன் அடுத்த படத்திற்கான வேலையில் ரஜினி இறங்கியுள்ளதாக தெரிகிறது. அதற்காக இயக்குனர் கௌதம் மேனன் ரஜினியை சந்தித்து ஒரு கதை கூறியிருப்பதாக செய்தி வெளியாகியுள்ளது. இந்தக் கதையை ‘கபாலி’ படத்துக்கு முன்பே ரஜினியிடம் கௌதம் மேனன் கூறியுள்ளாராம். அதன் பிறகு அது அப்படியே நின்றது. தற்போது இயக்குனர் கௌதம் மேனன் ரஜினியை சந்தித்து மீண்டும் கதை சொன்னதாக ஒரு தகவல் கோலிவுட்டில் வெளியாகியுள்ளது.

அதிகம் படித்தவை:  பிரபல தொலைக்காட்சியிடம் பெரிய தொகைக்கு விலைபோன நட்சத்திர கிரிக்கெட் !

சென்னையில் இன்று தனது ரசிகர்களை சந்தித்த ரஜினி வரும் 28 ஆம் தேதி புதிய படம் ஒன்றில் நடிக்க இருப்பதாக தெரிவித்தார். அவரே இந்த செய்தியை தெரிவித்திருப்பதன் மூலம் விரைவில் அடுத்த படத்தில் நடிக்க ஒப்புக் கொள்வாரா என்று பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். இதற்கிடையே எந்திரன் 2 படத்திற்கான டப்பிங்கில் ரஜினி ஈடுபட்டுள்ளார்.