Connect with us
Cinemapettai

Cinemapettai

bala-rajinikanth-cinemapettai

Tamil Cinema News | சினிமா செய்திகள்

பாலா இயக்கியதில் ரஜினிக்கு பிடித்தது இந்த ஒரு படம் தானாம்.. அதுக்கு விருந்து எல்லாம் வைத்தாராமே!

இயக்குனர் பாலா யதார்த்தமாக தன்னுடைய படங்களில் சமூக அக்கறைகளையும் சேர்த்து கிழித்து தொங்க விட்டு விடுவார். அவர் இயக்கிய அனைத்துப் படங்களிலும் ஒரு விதமான ஈரம் இருக்கும்.

அது மட்டுமில்லாமல் ஒவ்வொரு படத்திலும் சென்டிமெண்ட் காட்சிகள் மக்கள் மனதில் ஆழமாக பதியும் அளவுக்கு திறமையாக அந்த நடிகர்களிடம் இருந்து நடிப்பை வெளிக்கொண்டு வந்திருப்பார்.

பாலா இயக்கத்தில் சூர்யா நடித்த பிதாமகன் மற்றும் நந்தா போன்ற படங்கள்தான் அவரது சினிமா கேரியரில் முக்கியமான படங்கள். அதேபோல் விக்ரமுக்கு பிதாமகன் மற்றும் சேது.

இதுவரை பாலா இயக்கிய எட்டுப் படங்களில் சூப்பர் ஸ்டார் ரஜினிக்கு ஒரே ஒரு படம்தான் மிகவும் மனதிற்கு பிடித்த மாதிரி அமைந்ததாம். அதற்கு பாலாவை வீட்டிற்கு கூப்பிட்டு விருந்து எல்லாம் கொடுத்ததாக பாலா ஒரு விழா மேடையில் தெரிவித்திருந்தார்.

அந்த படம் நான் கடவுள். ஆர்யா மற்றும் பூஜா நடிப்பில் உருவாகி மிகப்பெரிய வரவேற்பை பெற்று வெற்றி பெற்ற படம். நான் கடவுள் படம் அந்த வருடத்தில் வெளியான அனைத்து விருதுகளையும் தட்டிச் சென்றது.

bala-rajini-naan kadavul

bala-rajini-naan kadavul

நான் கடவுள் படம் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் மனதுக்கு மிகவும் நெருக்கமான படமாக அமைந்ததால் பாலாவை கூப்பிட்டு விருந்து வைத்தாராம்.

Continue Reading
To Top