Videos | வீடியோக்கள்
நான் எப்பவுமே வில்லன்தான்.. அனல் பறக்கும் தர்பார் ட்ரைலர்
டிசம்பர் மாதம் என்றாலே அது தலைவர் தான். காரணம் டிசம்பர் 12-ம் தேதி தலைவரின் பிறந்த நாளாகும். அதனைக் கொண்டாடும் வகையில் தர்பார் படக்குழு தற்போது தரமான அப்டேட்டை வெளியிட்டுள்ளது.
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், ஆதித்யா அருணாச்சலம் கலக்கும் படம் தர்பார். இதில் தலைவருக்கு ஜோடியாக லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா நடித்துள்ளார். அனிருத் இசையமைத்துள்ள இந்த படத்தை ஏ.ஆர். முருகதாஸ் இயக்கியுள்ளார்.
கடந்த சில நாட்களாக தொடர்ந்து தர்பார் பட அப்டேட்களை படக்குழு வெளியிட்டு வருகிறது. அந்த வகையில் சில நாட்களுக்கு முன்னால் வெளிவந்த தர்பார் மோஷன் போஸ்டர் இணையதளங்களில் சக்கை போடு போட்டது. அதன்பிறகு முருகதாஸ், படத்தின் டப்பிங் பணி முடிந்துவிட்டது என்றும் ஒரு அப்டேட் கொடுத்தார்.
பாடல் வெளியீடு கடந்த 7ஆம் தேதி நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து இன்று தர்பார் படத்தின் டிரைலர் வெளியாகியுள்ளது. நீண்ட நாட்களுக்கு பிறகு முழுவதும் ஒரு ஆக்ஷன் படத்தில் ரஜினி நடித்துள்ளார்.
இதோ ட்ரைலர் லிங்க் :
