Videos | வீடியோக்கள்
டக்கரா வந்த தலைவர்.. தர்பார் தாறுமாறு மோஷன் போஸ்டர்
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மற்றும் நயன்தாரா நடிப்பில் ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் உருவாகியிருக்கும் திரைப்படம் தர்பார். வருகின்ற பொங்கலுக்கு வெளியாக இருக்கும் இந்த படத்தின் எதிர்பார்ப்பு இன்றிலிருந்து பல மடங்கு அதிகரித்துள்ளது. காரணம் அனிருத் இசையமைத்த அந்த மோஷன் போஸ்டர் தான்.
லைகா புரொடக்ஷன்ஸ் தயாரிக்கும் தர்பார் படத்தின் மோஷன் போஸ்டரை நான்கு மொழிகளில் நான்கு முன்னணி நடிகர்கள் வெளியிட்டுள்ளனர்.
தமிழில் தலைவரின் உயிர் நண்பனான இன்றைய பர்த்டே பேபி கமல்ஹாசனும், மலையாளத்தில் மோகன்லால் ,தெலுங்கில் மகேஷ்பாபு மற்றும் இந்தியில் சல்மான்கானும் வெளியிட்டனர்.
தர்பார் திரைப்படம் அனைத்து மொழிகளிலும் டப்பிங் செய்யப்பட்டு ரிலீசாக உள்ளது. இதனால் அடுத்த வருடத் தொடக்கத்திலேயே பெரியஅளவில் வசூல்வேட்டை நடத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதோ மோஷன் போஸ்டர் வீடியோ :
