Tamil Cinema News | சினிமா செய்திகள்
பரபரப்பை ஏற்படுத்தாத ரஜினியின் அண்ணாத்த.. ஒருவேளை அதனால இருக்குமோ? கலக்கத்தில் விநியோகஸ்தர்கள்
சாதாரணமாக சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் புதிய படத்தின் படப்பிடிப்பு ஆரம்பிக்கும் முன்னரே படத்தின் தலைப்பை அறிவித்து விடுவார்கள். தர்பார் வரை சூப்பர் ஸ்டார் அந்த பார்முலாவை தான் பின்பற்றி வந்தார். ஆனால் தற்போது நடித்து வரும் படத்தின் தலைப்பை பாதி படப்பிடிப்பு முடிந்த பின்னரே அறிவித்துள்ளார்.
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் சிறுத்தை சிவா இயக்கும் படம் அண்ணாத்த. அண்ணாத்த படத்தின் மோஷன் போஸ்டர் சமீபத்தில் வெளியாகியது. மிகவும் பரபரப்பாக பேசப்படும் என எதிர்பார்த்துக் கொண்டிருந்த அண்ணாத்த படத்தின் டைட்டில் போஸ்டர் அப்படி எதுவும் நிகழ்த்தவில்லை.
சாதாரண படங்களில் அறிவிப்பை போல சூப்பர் ஸ்டாரின் பட அறிவிப்பு மாறியது கோலிவுட்டை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது. டி இமான் இசையில் வெளியாகிய அண்ணாத்த படத்தின் மோஷன் போஸ்டர் தற்போது வரை வெறும் எட்டு லட்சம் பார்வையாளர்களை மட்டுமே கடந்துள்ளது.
அதுமட்டுமல்லாமல் எப்பொழுதுமே ரஜினிகாந்தின் பட அறிவிப்புகள் குறைந்தது ஒரு நாளாவது நம்பர் 1 இடத்தில் இருக்கும். ஆனால் அண்ணாத்த படத்தின் அறிவிப்பு அரை மணி நேரம் கூட நம்பர் 1 இடத்தில் இல்லை. ஒருவேளை சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் உடன் மோஷன் போஸ்டர் வந்திருந்தால் யூடியூபில் பல சாதனைகளை படைத்து இருக்கலாமோ, என்னமோ.
இருந்தும் நீண்ட நாட்களுக்கு பிறகு தலைவர் ரஜினிகாந்தை கிராமத்து கெட்டப்பில் பார்க்க ரசிகர்கள் மிகுந்த ஆர்வமாக இருக்கிறார்கள் என்பது மட்டும் உண்மை.
