fbpx
Connect with us
Cinemapettai

Cinemapettai

ஊருக்கு தான் உபதேசம்..! உள்ளுக்குள் ரஜினி இவ்வளவு அசிங்கமா?

Tamil Cinema News | சினிமா செய்திகள்

ஊருக்கு தான் உபதேசம்..! உள்ளுக்குள் ரஜினி இவ்வளவு அசிங்கமா?

நடிகர் ரஜினிகாந்த் கோடம்பாக்கத்தில் தனது ராகவேந்திரா மண்டபத்தில் ரசிகர்களை சந்தித்து புகைப்படம் எடுத்து வருகிறார். ரசிகர்கள் மத்தியில் ரஜினி பேசுகையில், 21 ஆண்டுகளுக்கு முன்பு எனக்கு அரசியல் விபத்து ஏற்பட்டது.

அப்போது ஒரு கூட்டணிக்கு நான் ஆதரவு அளிக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. அரசியல் ஆதாயத்துக்காக சிலர் என் பெயரை தற்போது தவறாக பயன்படுத்துகின்றனர். நான் எனது முடிவை விரைவில் எடுப்பேன். நான் கடவுளின் கருவியாக தற்போது உள்ளேன். நான் தற்போது நடிகராக இருக்க கடவுள் விரும்புகிறார். பிறகு என்னவாக வேண்டும் என்பதை கடவுள் தான் முடிவு செய்வார். கடவுள் கொடுக்கும் அந்த வேலையை எனது மனசாட்சியுடன் செய்வேன்.

 

கடவுள் விரும்பினால் கண்டிப்பாக வருவேன். என அரசியல் வருகை குறித்து மறைமுகமாக ரஜினி கூறினார். எனது ரசிகர்கள் நீங்கள் யாரும் உயிரை குடிக்கும் மது, சிகரெட் போன்ற தீய பழக்கங்களை படிப்படியாக கைவிடுங்கள் என்றும் ரசிகர்களிடம் ரஜினி கேட்டுக் கொண்டார். தற்போது சில ஆண்டுக்கு முன்பு ரஜினி தனது குடும்ப நண்பர்கள் உடன் கலந்து கொண்ட விழாவில் ரஜினி மதுஅருந்த கையில் மதுகிளாஸ் வைத்துள்ளது போன்ற புகைப்படம் ஒன்று வெளியாகியுள்ளது.

இதில் ரஜினி மது குடித்தாரா அல்லது குளிர்பானம் குடித்தாரா என்பது போன்று சமூக வலைதளங்களில் சர்ச்சை எழுந்து பல கருத்துக்களை பதிவு செய்து வருகின்றனர். இதனை ரஜினி தான் ரசிகர்களுக்கு விளக்க வேண்டும்.

சென்சார் செய்யாத செய்திகள், வீடியோக்கள் பார்க்க சினிமாபேட்டை Youtube-ல் Subscribe பண்ணுங்க.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published.

To Top