“2.0”வில் ரஜினி சம்பந்தப்பட்ட பெரும்பாலான முக்கிய காட்சிகளை ஏற்கெனவே ஷங்கர் படமாக்கிவிட்டார்.

“2.0”வைப் பொறுத்தவரை கிராபிக்ஸ் வேலைகளுக்கே அதிக முக்கியத்துவம் இருப்பதால், இனி ரஜினியை வைத்து எடுக்கப்பட வேண்டிய காட்சிகள் அவ்வளவாக இருக்காது என்று தகவல். இந்நிலையில், ரஜினியின் உடல்நிலை திடீரென சரியில்லாமல்போனதற்கு 2.0 படத்தில் அவருக்குக் கொடுக்கப்பட்ட கடினமான வேலைதான் காரணம் என்று சொல்லப்படுகிறது.

அதாவது 2.0 படத்தில் பல காட்சிகளில் விசித்திரமான உடையில் தோன்றுகிறாராம் ரஜினி. அந்த உடையின் எடை 40 கிலோவாம். 40 கிலோ எடை கொண்ட அந்த உடையை அணிந்தபடி கடும் வெயில்காலத்தில் அவுட்டோரில் வைக்கப்பட்ட படப்பிடிப்பில் கலந்து கொண்டிருக்கிறார்.

அதேபோல், கடுமையான குளிர் காலத்தில் ஏசி ப்ளோரில் படப்பிடிப்பை வைத்திருக்கிறார் ஷங்கர். இதன் காரணமாகத்தான் ரஜினியின் உடல்நிலை பாதிக்கப்பட்டதாக தகவல் வெளியாகி இருக்கிறது.