fbpx
Connect with us

Cinemapettai

இளையதளபதி விஜய் படத்தின் ரீமேக்கில் நடிக்கும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் – சுவாரசிய தகவல்

News | செய்திகள்

இளையதளபதி விஜய் படத்தின் ரீமேக்கில் நடிக்கும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் – சுவாரசிய தகவல்

vijay-rajinikanthஇயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் விஜய் இரட்டை வேடங்களில் நடித்த கத்தி படத்தின் தெலுங்கு ரீமேக் மெகா ஸ்டார் சிரஞ்சீவியின் 150வது திரைப்படமாக உருவாகவுள்ளது. சிரஞ்சீவியின் மகனும் நடிகருமான ராம் சரண் லைக்கா புரொடக்ஷனுடன் இணைந்து தயாரிக்கும் இப்படத்தை இயக்குனர் விவி விநாயக் இயக்குகின்றார்.

தற்போது தனது மகள் ஷ்ரீஜாவின் திருமணத்தில் பிசியாக இருக்கும் சிரஞ்சீவி திருமணம் முடிந்த பின்னர் இப்படத்தில் நடிக்கவுள்ளார். சிரஞ்சீவியின் 150வது படம் எனும் பெருமையுடன் உருவாகவிருக்கும் இப்படத்தில் சூப்பர்ஸ்டார் நடிகர் ரஜினிகாந்த் சிறப்பு தோற்றத்தில் நடிக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. சிரஞ்சீவியும் ரஜினிகாந்தும் நெருங்கிய நண்பர்கள் என்பது தெரிந்ததே.

கபாலி படத்தில் நடித்து முடித்து விட்டு தற்போது எந்திரன் படத்தின் இரண்டாம் பாகத்தில் ரஜினிகாந்த் நடிக்கின்றார்

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Advertisement

அதிகம் படித்தவை

To Top