Connect with us

Cinemapettai

உலகிலேயே சிறந்த இந்தியர்கள் பட்டியல்.. சூப்பர் ஸ்டார் எத்தனாவது இடம் தெரியுமா?

rajini-cover

Tamil Cinema News | சினிமா செய்திகள்

உலகிலேயே சிறந்த இந்தியர்கள் பட்டியல்.. சூப்பர் ஸ்டார் எத்தனாவது இடம் தெரியுமா?

இந்தியாவில் கடந்த 25 ஆண்டுகளாக வாழும் மிகச் சிறந்தவர்கள் யாரென 25 பேர் கொண்ட பட்டியல் ஒன்றை கொண்டு இன்டர்நெட்டில் கருத்துக்கணிப்பு நடத்தப்பட்டது.

இதில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள் முதலிடத்தை பிடித்துள்ளார். இன்டர்நெட் போட்டியை பொறுத்தவரை ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு விதமான ஓட்டுகள் விழும். குறிப்பிட்ட நாட்கள் வரை நடத்தப்படும் இந்த கருத்துக்கணிப்பில் போடப்படும் ஓட்டுகள் அடிப்படையில் பிரபலங்கள் மாறிமாறி முன்னேயும் பின்னேயும் அமைவர்.

அந்த வகையில் சில தினங்களுக்கு முன்பு ஐந்தாவது இடத்தில் இருந்த ரஜினிகாந்த் தற்போது முதல் இடத்தை பிடித்துள்ளார். அவருக்கு 7.03 சதவீத ஓட்டுகள் விழுந்துள்ளன. இவரைத் தொடர்ந்து சச்சின் டெண்டுல்கர் 6.99 சதவீத ஓட்டுகள் உடன் இரண்டாம் இடத்தை பிடித்துள்ளார். முன்னாள் பிரதமர் அப்துல் கலாம் அவர்களுக்கு மூன்றாம் இடமும், ஏ. ஆர். ரகுமான் அவர்களுக்கு நான்காம் இடமும் கிடைத்துள்ளது.

இதில் சிறப்பானது என்னவென்றால் முதல் நான்கு இடங்களில் மூன்று பேர் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர் என்பது பெருமைப்படக்கூடிய விஷயம் ஆகும்.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

To Top