1975இல் அபூர்வ ராகங்கள் படத்தில் அறிமுகமானார் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த். கே பாலச்சந்தர் இயக்கிய இந்த படத்தில் பாண்டியன் கதாபாத்திரத்தில் நெகட்டிவ் ரோல் பண்ணி அசத்தினார் ரஜினிகாந்த். அதன் பின் மூன்று முடிச்சு, அவர்கள் என அடுத்தடுத்து சூப்பர் ஹிட் படங்களில் நடித்தார்.
முதன்முதலாக புவனா ஒரு கேள்விக்குறி படத்தில் ஹீரோக்கு நிகரான கதாபாத்திரத்தில் நடித்து அசத்தினார். அதிலிருந்து இவருக்கு ஏறுமுகம்முகம் தான்.16 வயதினிலே, பைரவி என பல சூப்பர் ஹிட் படங்களில் இவர் முத்திரையை பதித்தார்.
தமிழ் சினிமாவில் முடிசூடா மன்னனாக வலம் வந்த ரஜினிக்கு சூப்பர் ஸ்டார் பட்டம் கிடைத்தது.1977ஆம் ஆண்டு வெளிவந்த பைரவி படத்தில் இவருக்கு இந்த பெயரை கொடுத்தார்கள். இவருக்கு இந்த பெயரை சூட்டியது கலைப்புலி எஸ் தானு. பைரவி படம் ரஜினிகாந்த் வாழ்க்கையில் ஒரு திருப்புமுனையை ஏற்படுத்தியது,
50வது வருடத்திற்கு சூப்பர் ஸ்டார் கொடுக்கும் இரட்டை ட்ரீட்
ரஜினிகாந்த் சினிமாவிற்கு வந்து 49 வருடங்கள் ஆகிவிட்டது. அடுத்த வருடம் வந்துவிட்டால் தன்னுடைய கலை பயணத்தில் 50 ஆவது ஆண்டில் காலடிகளை வைப்பார் சூப்பர் ஸ்டார். இப்படி வாழ்நாள் முழுவதும் சினிமாவிற்காக அர்ப்பணித்த ரஜினிகாந்த்திற்கு இன்று வரை திரைத்துறை சார்பில் எந்த ஒரு கௌரவமும் கிடைக்கவில்லை.
சினிமாவிற்கு வந்து 50 வருடத்தை நெருங்கப் போகும் ரஜினி இப்பொழுது தன்னுடைய ரசிகர்களுக்கு இரட்டிப்பு சந்தோசம் கொடுத்திருக்கிறார். அதாவது 2025 ஆம் வருடத்தில் இவருடைய இரண்டு படங்கள் ரிலீஸ் ஆகப்போகிறது. கூலி மற்றும் ஜெயிலர் 2 இந்த இரண்டு படங்களும் தன்னுடைய 50ஆவது வருடத்தில் ரிலீஸ் ஆகவேண்டும் என ரஜினி கட்டளை போட்டிருக்கிறார்.
- ஆளும் கட்சிக்குள் சம்பவம் செய்த ரஜினி
- சர்ச்சையை கிளப்பிய ரஜினியின் பேச்சு
- துரைமுருகனை சபையில் அசிங்கப்படுத்தி பேசிய ரஜினி