நடிகர் கமல்ஹாசனின் சகோதரர் சந்திரஹாசன். சமீபத்தில் லண்டனில் தனது மகள் அனுஹாசன் வீட்டில் இருந்தபோது காலமானார். சந்திரஹாசனுக்கு சென்னை காமராஜர் அரங்கத்தில் இரங்கல் கூட்டம் நடந்தது. இதில் நடிகர் ரஜினிகாந்த் பங்கேற்றார். அப்போது அவர் பேசுகையில், கமலை பற்றி மிகவும் கவலைப்பட்டார்.

ரஜினி பேசுகையில், ரஜினிக்கு மூன்று தகப்பன்கள். ஒருவர் அவரை பெற்ற சீனிவாசன், வளர்த்தவர் சாருஹாசன், ஆளாக்கியவர் சந்திரஹாசன்.  இரண்டு முறை தான் சந்திரஹாசனை சந்தித்துள்ளேன். அவரைப்பற்றி நிறைய கேள்விப்பட்டுள்ளேன். பொருளாதார வளர்ச்சி கமல் எதுவும் சேர்த்து வைக்கவில்லை.

அப்படியும் அவர் சேர்த்து வைத்திருந்தார் என்றால் அது சந்திரஹாசனால் தான். சந்திரஹாசன் இல்லாமல், கமல் இனி எப்படி சம்பாதிக்க போகிறார் என்று தெரியவில்லை, அதைப்பற்றி தான் நான் அதிகம் கவலைப்படுகிறேன். கமல் கடும் கோபக்காரர், அதனால் அவரிடம் ஜாக்கிரதையாக இருப்பேன் என்றார்.