சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்திற்கு உலகம் முழுவதும் கோடிக்கணக்கான ரசிகர்கள் உள்ளனர். இன்று வரை இவர் நடித்த எந்திரன் படத்தின் வசூலை யாராலும் முறியடிக்க முடியவில்லை.

இந்நிலையில் நேற்று தற்போது வளர்ந்து வரும் நடிகர் ஜி.வி.பிரகாஷ் ‘சந்தேகமே இல்லை அடுத்த சூப்பர் ஸ்டார் இளைய தளபதி விஜய் தான்’ என டுவிட் செய்தார்.

இதனால் கோபமான ரஜினிகாந்த் ரசிகர்கள் ஜி.வியை சமூக வலைத்தளங்களில் கடுமையாக திட்டி வருகின்றனர்.

‘நீ விஜய்யை தாராளமாக வாழ்த்திக்கோ.. அதுக்கு ஏன் சூப்பர் ஸ்டார் கிட்ட போறே.. அடுத்த புரட்சித் தலைவர், அடுத்த நடிகர் திலகம், அடுத்த புரட்சித் தலைவின்னு சொல்ல முடியுமா உன்னால… அப்புறம் எப்படி அடுத்த சூப்பர் ஸ்டார்னு மட்டும் சொல்ற’ என்று ஏக வசனத்தில் விட்டு வெளுத்துக் கொண்டிருக்கிறார்கள்.

அதிகம் படித்தவை:  பிஜேபியின் மெர்சல் பிரச்சனை ஏன்? விளாசிய பிரபல நடிகர்

‘பிட்டுப் படத்தில் (த்ரிஷா இல்லன்னா நயன்தாரா) நடிக்கிற பையனெல்லாம் அடுத்த சூப்பர் ஸ்டார்னு பேச ஆரம்பிச்சிட்டானே,’ என்று இன்னொரு க்ரூப் ஜிவி பிரகாஷை கரித்துக் கொண்டிருக்கிறது.

இன்னொரு பக்கம் அஜீத்தின் ரசிகர்களும் களத்தில் குதித்து, ‘அதெப்படி அடுத்த சூப்பர் ஸ்டார்னு விஜய்யைச் சொல்லலாம்.. ஒரே சூப்பர் ஸ்டார்தான்… அவர் ரஜினி. ஒரே தல அஜீத்… அந்த மாதிரி ஒரு பட்டத்தோடு நிறுத்திக்கங்க விஜய் பேன்ஸ்’ என எச்சரித்துள்ளனர்.

அதிகம் படித்தவை:  விஜய்யின் மெர்சல் படம் ஒத்திவைப்பு.! அதிர்ச்சியில் விஜய் ரசிகர்கள்.!

பிறந்த நாளன்னிக்கு விஜய் ரசிகர்களை குளிர்விப்பதாக நினைத்துக் கொண்டு குளவிக் கூட்டை கலைச்சிட்டாரே இந்த ஜிவி பிரகாஷ்.. இவருக்கு எதுக்கு இந்த ரசிக வேலை… அனைவருக்கும் பொதுவானவராக இருப்பதுதான் கலைஞனுக்கு அழகு என்கிறார்கள் இந்த சண்டையை வேடிக்கைப் பார்ப்போர்!