Tamil Cinema News | சினிமா செய்திகள்
விதியை மீறியதற்காக ரஜினிகாந்துக்கு அபராதம் எவ்வளவு தெரியுமா? 100 கோடி சம்பளம் வாங்குவதற்காக இப்படியா!
தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரம் ரஜினிகாந்த். இவர் சினிமாவுக்கு வந்த 40 ஆண்டுகளில் நம்பர் ஒன் நடிகராக வலம் வருவது பழமொழி முன்னணி நடிகர்களும் அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.
அதற்காக இவரது உழைப்பும் சிறியதல்ல. ஒவ்வொரு படங்களிலும் தன்னுடைய ஸ்டைலில் அனைவரையும் கவர்ந்தார். தற்போதும் தமிழ் சினிமாவில் அதிக சம்பளம் வாங்கும் நடிகர் இவர்தான்.
சமீபத்தில் தனது மகள் சௌந்தர்யா மற்றும் அவரது கணவர் வாங்கிய புது விலை உயர்ந்த காரில் ரஜினிகாந்த் ஒரு ரவுண்டு வந்தார். தற்போது ரஜினிகாந்த் கேளம்பாக்கத்தில் உள்ள பண்ணை வீட்டில் வசித்து வருகிறார்.
இதனால் ஒரு கூட்டம் ரஜினிகாந்த் இ பாஸ் வாங்கிக்கொண்டு சென்றாரா அல்லது தனது செல்வாக்கை பயன்படுத்தி சென்றாரா என பலரும் பல்வேறு விதமாகப் பேச ஆரம்பித்துவிட்டனர்.
இதனை விசாரித்த காவல்துறையினர் அவரை பாஸ் இல்லாமல் சென்றதாக தகவல்களை வெளியிட்டனர். இதனால் உடனடியாக ரஜினிக்கு அபராதம் போடப்பட்டுள்ளது.
அதாவது 100 கோடி சம்பளம் வாங்கும் ரஜினிக்கு ரூ 100/- அபராதம் போட்டுள்ளனர். இதெல்லாம் உங்களுக்கே ஓவரா தெரியலையா என்பதை போல அவர்கள் அபராதம் போட்டது அனைவருக்கும் சிரிப்பை ஏற்படுத்தியுள்ளது.
சாதாரண மக்களிடம் அந்த கேஸ் போடுவேன், இந்த கேஸ் போடுவேன் என பயமுறுத்தி 1000, 500 வாங்கும் காவல்துறையினர் பெரிய ஆட்களிடம் பொட்டி பாம்பாய் அடங்கி விடுவது தான் அனைவருக்கும் வேதனையை கொடுத்துள்ளது.
