Rajinikanth: சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் சினிமா கேரியர் இதுவரை எந்த தென்னிந்திய ஹீரோக்களும் தொடாத ஒரு உச்சம் என்றுதான் சொல்ல வேண்டும். ஆரம்ப காலகட்டங்களில் கமல் மற்றும் சிவக்குமார் போன்றவர்களுடன் போட்டி போட்டு, அதன் பின்னர் சரத்குமார் விஜயகாந்த், அதன் பின்னர் விஜய் அஜித் என்று அவருடைய பாதை மாறி இனி சிவகார்த்திகேயன், தனுஷ் போன்றவர்களுடனும் தன்னுடைய பந்தய களத்தை பகிர்ந்து வருகிறார்.
கமலஹாசன், அஜித், விஜய், விக்ரம், சூர்யா போன்ற டாப் ஹீரோக்கள் ஒரு காட்சியில் அவர்கள் ஒரு நல்ல நடிகனாக தன்னை நிரூபிப்பதற்கு பயங்கரமான வொர்க் அவுட் செய்ய வேண்டும். ஆனால் ரஜினிக்கு அப்படி கிடையாது. அவருடைய நடை, சிரிப்பு அவ்வளவுதான் அவரை சுற்றி இருக்கும் மற்ற கேரக்டர்கள் மீது யாருடைய கண்ணும் போகாது.
ரஜினி மட்டும் அந்த பக்கம் போகவே இல்ல
இப்படி ஒரு ஸ்டைலான ஹீரோ இனி தென்னிந்திய சினிமாவில் எங்குமே பார்க்க முடியாது என்று தான் சொல்ல வேண்டும். இந்த டாப் ஹீரோக்கள் எல்லோரும் செய்த ஒரு விஷயத்தை ரஜினி செய்யவில்லை என்று சொன்னால் நம்ப முடிகிறதா.
அதுதான் விளம்பர படங்களில் நடிப்பது கமலஹாசன் விளம்பர படங்களில் நடித்திருக்கிறார். அதேபோன்று ஆரம்ப காலகட்டங்களில் விஜய் கோக், டொகோமோ விளம்பரங்களில் நடித்திருக்கிறார். நடிகர் அஜித்குமாரும் ஆரம்ப காலகட்ட சினிமாவில் விளம்பர படங்களில் நடித்திருக்கிறார்.
சூர்யா, விக்ரம், கார்த்தி, சிவகார்த்திகேயன் என அத்தனை ஹீரோக்களும் விளம்பர படங்களில் நடித்துக் கொண்டிருக்கிறார்கள். ஆனால் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் இதுவரை எந்த ஒரு விளம்பர படத்திலும் நடிக்கவில்லை.
அவர் வளர்ந்து வரும் காலகட்டங்களில் போலியோ தடுப்பு, கண் தானம், தமிழ்நாடு பால் நுகர்வோர் சங்கத்திற்காக Palm Cola போன்ற தமிழக அரசின் விளம்பரங்களில் தான் நடித்தாரே தவிர பணத்திற்காக இதுவரைக்கும் விளம்பர படங்களில் நடிக்கவில்லை.