Tamil Cinema News | சினிமா செய்திகள்
சிங்கிளாக எல்லாரையும் ஓரங்கட்டி சாதனை செய்த ரஜினி.. வயசானாலும் சிங்கம் சிங்கம் தான்
ஒரு மனிதன் ஒரு துறையில் கிட்டத்தட்ட முப்பத்தைந்து வருடங்களுக்கு மேல் நம்பர் 1 இடத்தில் இருக்க முடியுமா என்பதை யோசிப்பதே அரிது. ஆனால் அதை செயலில் நிரூபித்துக் காட்டியவர் தான் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்.
வசூல் ரீதியாக சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தை தற்போது வரை எந்த நடிகர்களும் மிஞ்ச முடியவில்லை. அந்த வகையில் சினிமா மட்டுமல்லாமல் தற்போது டிவியிலும் புதிதாக சாதனை படைத்துள்ள சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்.
பிரபல டிஸ்கவரி சேனலில் மேன் வெர்சஸ் வைல்ட் என்ற நிகழ்ச்சி நீண்ட காலமாக ஒளிபரப்பப்பட்டு வருகிறது. இதில் பியர் கிரில்ஸ் என்பவர் உலகின் ஆபத்தான காடுகளுக்கு எல்லாம் சென்று தனியாக மாட்டிக் கொண்டால் எப்படி உயிர் வாழ்வது என்பதை செய்து காட்டுவார்.
அந்த வகையில் சமீபத்தில் கர்நாடகாவில் உள்ள காட்டுப் பகுதியில் அந்த நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் பியர் கிரில்ஸ் உடன் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் கலந்து கொண்டார். இந்த நிகழ்ச்சி தற்போது பலரால் பாராட்டு பெற்று டிவி ஷோக்களில் புதிய சாதனை படைத்துள்ளது.
டிஸ்கவரி சேனலை சேர்ந்த மொத்தம் 12 சேனல்களில் ஒளிபரப்பான மொத்த நிகழ்ச்சிகளைக் காட்டிலும் ரஜினிகாந்த் கலந்து கொண்ட நிகழ்ச்சி அதிக பார்வையாளர்களை பெற்றுள்ளதாம். இந்த நிகழ்ச்சி 1.41 பில்லியன் மக்களை கவர்ந்துள்ளது.
